'இவரும்.. அவரும்.. கிருஷ்ணரும் அர்ஜூனரும் மாதிரி'.. 'ஆனா.. இதுல'.. ரஜினி சொன்ன பஞ்ச்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Aug 11, 2019 08:06 PM
கடந்த 2 ஆண்டுகளில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின் பணிகள், சந்திப்புகள், உரைகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் அடங்கிய புத்தகத் தொகுப்பானது ஒன்று லிசனிங், லேர்னிங் அண்ட் லீடிங் என்கிற தலைப்பில் சென்னையில், கலைவாணர் அரங்கத்தில் வெளியிடப்பட்டடது.
இந்த நூலை பாஜக தேசியத் தலைவரும், உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த நூலை வெளியிட்டார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நடிகர் ரஜினிகாந்த், ‘துக்ளக்’ ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி, அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் தலைவர் டாக்டர் பி.சி.ரெட்டி, வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
இதில் பேசிய ரஜினிகாந்த், ‘ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை, அமித் ஷா திறமையாகக் கையாண்டுள்ளார், இதற்கென நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரை சிறப்பாக இருந்தது. பிரதமர் மோடியும் அமித் ஷாவும் கிருஷ்ணர் மற்றும் அர்ஜூனர் போன்றவர்கள். இதில் யார் கிருஷ்ணர், யார் அர்ஜூனர் என்பது அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரியும்’ என்று கூறினார்.
இதேபோல், அமித் ஷா பேசுகையில், ஒரு உள்துறை அமைச்சராக, காஷ்மீர் விவகாரத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவில், தனக்கு எவ்விதமான குழப்பங்களும் இல்லை என்றும், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தைத் தரும் 370-ஐ நீண்ட நாட்களுக்கு முன்பாகவே நீக்கியிருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.