legend updated recent

'ஆகஸ்ட் 15-ல் தல தோனி குறித்து'... 'வெளியான புதிய தகவல்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Aug 09, 2019 04:34 PM

வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று லடாக்கில் உள்ள லே நகரில் நடைபெறும் சுதந்தர தின விழாவில், இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் தோனி தேசிய கொடியை ஏற்றுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

MS Dhoni likely to unfurl tricolour in Leh on Independence Day

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து 370-வது ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது. புதிய யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டுள்ள லடாக்கில் லே நகரில், வரும் 15-ம் தேதியன்று சுதந்திர தின விழா கொண்டாடப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மஹேந்திரசிங் தோனி தேசிய கொடி ஏற்றுவார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து சீனியர் ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘தோனி இந்திய ராணுவத்தின் சிறந்த அம்பாசிடர். அவர் இந்திய ராணுவ வீரர்களை அதிகளவில் ஊக்குவிக்கிறார். தவிர, வீரர்களுடன் கால்பந்து, வாலிப ல் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடுகிறார். ஆகஸ்ட் 15 வரை தோனி ராணுவ வீரர்களுடன் இருப்பது மகிழ்ச்சியான விஷயம்’ என்றார். இந்திய அணியின் முன்னணி வீரரான தோனி, கடந்த ஜூலை மாதம் 31 முதல் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை தங்கி ராணுவத்தில் பயிற்சி பெற்று வருகிறார்.

Tags : #MSDHONI #LEH #INDEPENDENCEDAY