'இது போதும் எங்களுக்கு'... 'நெகிழ்ந்த ராணுவ வீரர்கள்'... 'அப்படி என்ன 'தல தோனி' செஞ்சாரு'?
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Jeno | Aug 02, 2019 11:15 AM
ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கர்னலாக இருக்கும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தற்போது இந்திய ராணுவத்தோடு பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமெண்டில் இருக்கும் வீரர்களோடு அவர் இந்த பயிற்சியினை மேற்கொண்டு வருகிறார். இது இந்திய வீரர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.

பாராசூட் ரெஜிமெண்டில் இருக்கும் விக்டர் படையுடன் இணைந்து காஷ்மீரில் ரோந்து பணியினை மேற்கொண்டு வரும் தோனியின் செயல்பாடுகள், அங்குள்ள வீரர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் தெற்கு காஷ்மீரில் பணியில் இருக்கும் தோனி, ராணுவ வீரர்களுக்கு கிரிக்கெட் பேட்டில் ஆட்டோகிராப் போடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது. இது அங்குள்ள வீரர்களை நெகிழச் செய்துள்ளது.
இதனிடையே தோனி குறித்து பேசிய ராணுவ தளபதி '' நாம் தோனியை பாதுகாக்க வேண்டிய அவசியமில்லை, அவர் மக்களை பாதுகாத்து அவருக்கு கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக முடிப்பார்'' என பெருமையுடன் கூறியுள்ளார்.
Here comes the 1st exclusive picture of #LtColonelDHONI From Srinager. 😍❤️ pic.twitter.com/gbZtqyQETJ
— DHONIsm™ ❤️ (@DHONIism) August 1, 2019
