'அப்படின்னா..'.. டக்குன்னு நான் செலக்ட் பண்றது இவராதான் இருப்பார்.. அப்புறம் இவங்கல்லாம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Jul 28, 2019 03:33 PM

இந்திய கபடி அணி வீரர்களின் உடல் தகுதியும் மன உறுதியும்தான், உலகம் முழுவதும் கபடிக்கு அங்கீகாரம் கிடைத்ததற்குக் காரணம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி தெரிவித்துள்ளார்.

i will pick dhoni, rishabh pant for indian kabaddi Team, Kohli

மும்பையில் நடந்த புரோ கபடி லீக் போட்டியின் முதல் ஆட்டத்தில் யூ மும்பா மற்றும் புனேரி பல்தான் அணிகள் மோதியதில், யூ மும்பா அணி 33க்கு 23 என்கிற புள்ளிகள் கணக்கில் வென்றது. இரண்டாவதாக நடந்த ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணியை, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர் அணி வீழ்த்தியது. முன்னதாக மும்பையில் நடந்த முதல் போட்டியை தொடங்கிவைக்கும் முன் பேசிய கோலிதான் மேற்கண்டவாறு பேசியுள்ளார். இந்த நிகழ்வின் போது தமிழ் தலைவாஸ் கபடி அணியின் நட்சத்திர வீரர் ராகுல் சௌத்ரிதான் தனக்கு விருப்பமானவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அது மட்டுமின்றி, இந்திய கபடி அணிக்கு வீரர்களைத் தேர்வு செய்ய வாய்ப்பு கிடைத்தால்,  ‘யோசிக்காமல், தயங்காமல் தோனியை தேர்வு செய்வேன்’ என்றும் அவரை அடுத்து ரவீந்திர ஜடேஜா, ரிஷப் பந்த், உமேஷ் யாதவ், பும்ரா மற்றும் கே.எல்.ராகுல் உள்ளிட்ட வீரர்களை தயார் செய்யலாம் என்றும் கோலி கூறியுள்ளார்.  ஆனால், ‘மன உறுதியும் உடற்தகுதித் திறனும் தேவையாதலால், அப்படி ஒரு இந்திய கபடி அணியில் நான் என்னையே தேர்வு செய்திருப்பேனா என்பது தெரியவில்லை. அந்த அளவுக்கு மற்ற வீரர்கள் மனதளவிலும், உடலளவிலும் உறுதியாக இருக்கிறார்கள்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Tags : #VIRATKOHLI #MSDHONI #KABADDI