‘நான் அப்டி சொல்லவே இல்லயே’... ‘அந்தர் பல்டி’ அடித்த பிரபல வீரரின் 'தந்தை'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Jul 26, 2019 11:12 AM

தோனியை எப்பொழுதுமே, கடுமையாக விமர்சனம் செய்துவரும் யுவராஜ் சிங்கின் தந்தை, இந்த முறை அதற்கு மாறாக புகழாராம் சூட்டியுள்ளார்.

Yograj Singh makes a sensational U turn on MS Dhoni

இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங், பெரும்பாலான பேட்டிகளில் முன்னாள் கேப்டன் தோனியை விமர்சிக்கக் கூடியவர். தனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்தது தோனி தான் எனப் பல குற்றச்சாட்டுகளை, பல்வேறு கட்டங்களில் யோக்ராஜ் தெரிவித்துள்ளார்.  சமீபத்தில் முடிந்த உலகக் கோப்பை தொடரிலும், தோனியின் செயல்பாட்டை மிகக் கடுமையாக விமர்சித்தார். அணி வெற்றிப்பெற வேண்டும் என்ற முனைப்பில் தோனி விளையாடவில்லை எனக் கடுமையாக சாடினார்.

இந்நிலையில் நியூஸ் 24 ஸ்போர்ட்ஸ்க்கு பேட்டியளித்த யோக்ராஜ் சிங், ‘இந்திய அணியின் தோல்விக்கு, தான் என்றுமே தோனியை விமர்சித்தது கிடையாது. உலகக் கோப்பை தோல்விக்கு நான் தோனியை குற்றம் சொல்லவில்லை. அது எனது கருத்தே கிடையாது. நீங்கள் தவறான கேள்வியை, தவறான நபரிடம் கேட்டுள்ளீர்கள். நீண்ட காலமாக இந்திய அணிக்கு பாங்காற்றிய அருமையான வீரர் அவர் என்பது சந்தேகமே இல்லை.

அவர் லெஜெண்ட். இன்னும் சொல்லப் போனால், நானும் தோனி ரசிகன்தான். கிரிக்கெட்டை அவர் விளையாடிய விதம், அணியை அவர் வழிநடத்திய விதம், முக்கிய கட்டத்தில் களத்தில் அவர் எடுத்த முடிவுகள் என அனைத்தும் சிறப்பாக இருக்கும். அவர் நீண்ட காலமாக தேசத்துக்கு சேவை செய்து வருகிறார் என்பதில் சந்தேகமே இல்லை’ என்றார்.