‘பயிற்சியை துவங்கிய தோனி’... ‘இந்திய ராணுவம் அளித்த புதிய தகவல்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Jul 25, 2019 05:52 PM

இந்திய கிரிக்கெட் அணி வீரர் மகேந்திர சிங் தோனி, வரும் ஜூலை 31-ம் தேதி முதல் காஷ்மீர் பகுதியில், ரோந்துப் பணியில் ஈடுபட உள்ளதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.

MS Dhoni fulfils promise, begins training with Parachute Regiment

இந்திய கிரிக்கெட் அணி வீரர் தோனி கடந்த 2011-ம் ஆண்டு முதல் இந்திய ராணுவத்தின் கவுரவ லெப்டினண்ட் கர்னலாக இருந்து வருகிறார். இதனால் அவர்  ராணுவத்தினருடன் சேர்ந்து, அவ்வப்போது கலந்துரையாடுவதுடன், பயிற்சியிலும் ஈடுபட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். சமீபத்தில் உலகக் கோப்பை தொடரில் விளையாடிய தோனி, அடுத்த 2 மாதங்களுக்கு ராணுவத்தில் தங்கி பயிற்சி பெறப் போவதாக அறிவித்திருந்தார்.

மேலும் இதற்காக பாராசூட் ரெஜிமெண்டலில் தங்கி பயிற்சி பெற அனுமதி கோரியிருந்தார். அதனை பரிசீலித்த இந்திய ராணுவத் தளபதி பிபின் ராவத், தோனியை 106- வது தரைப் படைப் பிரிவில் இணைத்துக்கொள்வதாக தெரிவித்தார். எனினும் அவர் ராணுவத்தின் தாக்குதல் பணிகளில் ஈடுபடுத்தப்படமாட்டார் எனக் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமெண்ட்டுடன், கடந்த புதன்கிழமைன்று தோனி இணைந்தார்.

அங்கு அவர் இருமாத ராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளார். வரும் ஜூலை 31-ம் தேதி முதல் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை காஷ்மீர் பகுதியில், இந்திய ராணுவத்தினருடன் சேர்ந்து ரோந்து பணியில் தோனி ஈடுபட உள்ளார். மேலும் வீரர்களுடன் இணைந்து தங்கவுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் உற்சகாத்தில் உள்ளனர்.

Tags : #MSDHONI