அவங்க ரெண்டு பேர்ல.. ‘எனக்கு இவரதான் பிடிக்கும்..’ ரசிகர்களின் கேள்விக்கு.. ‘ட்விட்டரில் பதிலளித்துள்ள பிரபல வீரர்..’
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Saranya | Jul 31, 2019 02:35 PM
உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய அணி அடுத்ததாக 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாட உள்ளது.

இந்தத் தொடருக்கான இந்திய அணி பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு அறிவிக்கப்பட்டு, மூன்று வகையான போட்டிகளுக்கும் கோலியே மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் ட்விட்டரில் இந்திய அணி வீரர்கள் குறித்த ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
நேற்று இரவு 15 நிமிடங்களுக்கு ரசிகர்கள் தன்னிடம் கேள்விகள் கேட்கலாம், சுவாரஸ்யமான கேள்விக்கு தான் பதிலளிப்பதாக சோயிப் அக்தர் ட்விட்டரில் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து ரசிகர்கள் பலரும் குறிப்பாக இந்திய அணி பற்றியே கேள்விகள் கேட்டுள்ளனர்.
கோலி, ரோஹித் இருவரில் யாரைப் பிடிக்கும் என்ற கேள்விக்கு கோலியைத் தான் பிடிக்கும் என அக்தர் பதிலளித்துள்ளார். கோலி, ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித், வில்லியம்சன், பாபர் அஸாம் இவர்களில் சிறந்த வீரர் யார் என்ற கேள்விக்கும் கோலி என்றே அவர் கூறியுள்ளார். மேலும் தோனி பற்றி ஒரே வார்த்தையில் சொல்லுங்கள் எனக் கேட்டதற்கு அவர் ஒரு லெஜண்ட் என பதிலளித்துள்ளார். இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிற்கு கோலிக்குப் பதிலாக ரோஹித் ஷர்மாவை நியமிக்க வேண்டுமா என்ற கேள்விக்கு தேவையில்லை எனவும் அக்தர் பதிலளித்துள்ளார்.
