லாட்டரில கெடச்ச ₹ 81 கோடி.. "ஆனாலும் இந்த ஒரு விஷயத்துக்காக தான் மனுஷன் வெயிட்டிங்ல இருக்காராம்"...
முகப்பு > செய்திகள் > உலகம்பொதுவாக, உலக அளவில் பல இடங்களில் லாட்டரி டிக்கெட் விற்பனை என்பது பல இடங்களில் நடைபெற்று வரும் ஒரு விஷயமாகும்.

Also Read | "என்ன ஆனாலும் அதை மட்டும் நடக்கவிட மாட்டோம்".. இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லரின் பரபர பேச்சு.. என்னவாம்?
இதன் காரணமாக, சாதாரண மனிதர்களாக இருக்கும் நபர்களின் வாழ்க்கை கூட ஒரே இரவில் மாறுவது தொடர்பாக நிறைய செய்திகளை கடந்து வந்திருப்போம்.
சமீபத்தில் கூட, துபாயில் உள்ள உணவகத்தில் ஊழியராக பணிபுரிந்து வரும் இந்தியர் ஒருவருக்கு பல கோடி ரூபாய் லாட்டரியில் பரிசாக விழுந்திருந்தது.
துபாய் மட்டுமில்லாமல், கேரளா, கனடா உள்ளிட்ட பல இடங்களிலும் லாட்டரி மூலம் பலரின் வாழ்க்கை பல விதமாக கூட மாறலாம். அப்படி ஒரு சூழலில், ஜெர்மனி பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு பல கோடி ரூபாய் லாட்டரியில் விழுந்துள்ள நிலையில், அவர் ஏங்கி வரும் விஷயம், இணையத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.
ஜெர்மனியின் Dortmund என்னும் பகுதியை சேர்ந்தவர் Kursat Yildirim. இவருக்கு சமீபத்தில் லாட்டரி மூலம் இந்திய மதிப்பில் சுமார் 81 கோடி ரூபாய் பரிசாக விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனைத் தொடர்ந்து மிக பெரிய பரிசு தொகை கிடைத்ததால், ஸ்டீல் ஃபேக்டரியில் தான் பார்த்து வந்த வேலையில் இருந்தும் விலகி உள்ளார் Kursat.
அது மட்டுமில்லாமல், புதிய கார்கள், விலை மதிப்புள்ள வாட்ச் உள்ளிட்ட பல விஷயங்களை வாங்கி உள்ளார். மிகவும் ஆடம்பரமாக தனது வாழ்க்கையை Kursat வாழ்ந்து வரும் நிலையில், 41 வயதாகும் அவர் ஒரே ஒரு விஷயத்துக்காக ஏங்கி வருகிறார். இத்தனை நாட்களாக சிங்கிளாக இருக்கும் Kursat, தனக்கு ஒரு மனைவி வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இது பற்றி பேசும் அவர், "எனக்கு காதலில் விழ வேண்டும் என ஆசை. டிராவல் செய்ய விருப்பமுள்ள பெண்களையும் என்னுடன் புதிய குடும்பம் தொடங்க வேண்டும் என விரும்பும் பெண்ணையும் எதிர்பார்க்கிறேன" என தெரிவித்துள்ளார். தான் பரிசு வென்ற தொகையை செலவு செய்து வாழ்நாளை கழிக்கவும் ஒரு பெண்ணை தேடும் Kursat, லாட்டரியில் பரிசு கிடைத்ததும் பலரும் தன்னை தொடர்ந்து அழைத்து பண உதவி குறித்து கேட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பல கோடி ரூபாய் பரிசு வென்ற நபர், திருமணம் செய்து வாழ பெண் ஒருவரை தேடி வரும் விஷயம், அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
Also Read | ஆஸ்திரேலியாவில் கைதான இலங்கை வீரர் தனுஷ்கா குணதிலகா.. புகார் அளித்த பெண் சொல்வது என்ன? பரபரப்பு தகவல்!!

மற்ற செய்திகள்
