‘அசால்டாக கேட்ச் பிடித்த பென் ஸ்டோக்ஸ், அதிர்ச்சியடைந்த பேட்ஸ்மேன்’.. ‘ஆர்ப்பரித்த ரசிகர்கள்’!.. வைரல் வீடியோ

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Arunachalam | May 31, 2019 12:10 PM

12 வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று இங்கிலாந்தில் தொடங்கியுள்ளது.

Benstokes amazing catch against southafrica in the World cu goes viral

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் தொடங்கியுள்ள நிலையில், நேற்று (30/05/2019) நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து அணி 104 ரன்கள் வித்யாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தியது.

இந்நிலையில், நேற்று (30/05/2019) நடந்த போட்டியில், முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 312 ரன்களை குவித்தது. இதையடுத்து, 313 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று தனது ஆட்டத்தை தென்னாப்பிரிக்கா தொடங்கியது. அப்போது, ஆட்டத்தின்  34-வது ஓவரை அடில் ரஷித் வீசினார்.

இந்நிலையில், முதல் பந்தை சிக்ஸ் அடிப்பதற்காக தனது ஸ்டைலில் ஃபெலுக்வயோ அடித்தார். ஆனால், அந்த பந்தை அபாரமாக பாய்ந்து தனது ஒரு கையால் பென் ஸ்டோக்ஸ் கேட்ச் பிடித்தார். இதையடுத்து, பென் ஸ்டோக்ஸ் அந்த கேட்சை பிடித்ததற்கு மைதானத்தில் அனைவரும் கைதட்டி ஆரவாரப்படுத்தினர். இந்நிலையில், இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

 

Tags : #ICCWORLDCUP2019 #WORLDCUPINENGLAND #ENG VS SA #BENSTOKES #CATCH #VIRAL VIDEO