‘உலகக்கோப்பைல எனக்கு பிடித்த பேட்ஸ்மேன், பவுலர் யார் தெரியுமா’?.. மனம் திறந்த சச்சின்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Arunachalam | May 31, 2019 01:56 PM
12 வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று இங்கிலாந்தில் தொடங்கியுள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் தொடங்கியுள்ள நிலையில், நேற்று (30/05/2019) நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதின. இதில், சச்சின் வர்ணனையாளராக அவதாரம் எடுத்து அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
இந்நிலையில், அப்போது சச்சினிடம் இந்த உலகக்கோப்பையை ஆளப்போகும் இந்தியர் அல்லாது ஒரு வீரர் பெயரை சொல்லுங்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் பெயரை குறிப்பிட்டார்.
மேலும், ‘டேவிட் வார்னர் ரன் எடுப்பதில் வெறித்தனமாக இருக்கிறார். இதை இந்த ஐபிஎல் தொடரில் நான் பார்த்தேன். எப்போதுமே கிரிக்கெட்டில் ஃபிட் ஆக இருப்பவர் டேவிட் வார்னர், ஆனால் கடந்த ஐபிஎல் தொடரில் அவரது ஃபிட்னஸ் லெவல் இன்னும் அதிகமாக இருந்தது’ என்று கூறினார்.
இதே போல் சிறந்த பவுலர் யார் என்ற கேள்விக்கு, ‘இங்கிலாந்தின் ஜோப்ரா ஆர்ச்சரின் பந்துவீச்சு சிறப்பாக இருக்கிறது. பேட்ஸ்மேன்களை ரன் எடுக்க விடாமல் அவர் கட்டுப்படுத்துகிறார். எப்போதெல்லாம் இங்கிலாந்து அணிக்கு விக்கெட் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் ஆர்ச்சர் தேவைப்படுகிறார்’ என்று கூறியுள்ளார்.
இதையடுத்து ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் பெயரையும் சச்சின் டெண்டுல்கர் குறிப்பிட்டார். மேலும் ஆப்கானிஸ்தானின் வெற்றிக்கு ரஷித் கான் முக்கிய பங்கு வகிப்பார் என்றும் சச்சின் தெரிவித்துள்ளார்.