‘கோலி, தோனி பவுலிங் ப்ராக்டீஸ்’.. அப்போ மத்தவங்க என்ன பண்றாங்க? பிசிசிஐ வெளியிட்ட வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | May 31, 2019 07:17 PM

இந்திய அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபடும் வீடியோயை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

ICC World cup 2019: Team India practice session

ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பைத் தொடர் இங்கிலாந்து நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி அபார பெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பாகிஸ்தான் 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனை அடுத்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து வரும் ஜூன் 5 -ம் தேதி தென் ஆப்பிரிக்காவை இந்திய அணி எதிர்கொள்கிறது. ஏற்கனவே நடந்து முடிந்த பயிற்சி ஆட்டத்தில் நியூஸிலாந்திடம் தோல்வியும், வங்கதேசத்திடம் வெற்றியும் இந்தியா பெற்றுள்ளது. இந்நிலையில் இந்திய வீரர்கள் உலகக்கோப்பைக்காக தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டுள்ள வீடியோவை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இதில் விராட் கோலி பௌலிங் பயிற்சியில் ஈடுப்பட்டிருந்தார். கேதர் ஜாதவிற்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு பதிலாக கோலி பந்து வீச வாய்ப்புள்ளது.

Tags : #ICCWORLDCUP2019 #BCCI #TEAMINDIA