‘டேவிட் வார்னர் உலகக்கோப்பையில் விளையாடுவாரா’?.. என்ன காரணம்?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Arunachalam | May 31, 2019 04:34 PM
12 வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று இங்கிலாந்தில் தொடங்கியுள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நேற்று (30/05/2019) தொடங்கியுள்ள நிலையில், நாளை (01/06/2019) நடைபெறவுள்ள போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ளனர்.
இதனையடுத்து, காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த திங்கட்கிழமை அன்று இலங்கை அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் டேவிட் வார்னர் பங்கேற்கவில்லை. இந்நிலையில் நாளை நடைபெறும் போட்டியில் டேவிட் வார்னர் பங்கேற்கமாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறியதாவது ‘வார்னர் அணியில் பங்கேற்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார். மற்ற வீரர்களை போல கண்டிப்பாக விளையாட வேண்டும் என்று நினைப்பார். அவர் விளையாடுவது குறித்து முடிவெடுக்கப்படும்’ என்று கூறியுள்ளார்.
