‘கொஞ்ச நஞ்ச சேட்டையா பண்றீங்க’.. பௌலிங் செய்து கலாய்த்த கோலி..! வைரலாகும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Jul 09, 2019 04:56 PM
பயிற்சி ஆட்டத்தில் பும்ராவைப் போல் விராட் கோலி பௌலிங் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியா மற்றும் நியூஸிலாந்துக்கு இடையேயான அரையிறுதிப் போட்டி இன்று(09.07.2019) மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இரு அணிகளும் ப்ளேயிங் 11 -ல் முக்கிய மாற்றத்தை செய்துள்ளன. இதில் இந்திய அணியைப் பொறுத்தவரை குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சஹால் எடுக்கப்பட்டுள்ளார். அதேபோல் நியூஸிலாந்து அணியில் டிம் சவுத்தி நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக, காயத்தால் சில போட்டிகளில் விளையாடாமல் இருந்த வேகப்பந்து வீச்சாளர் பெர்குஷன் அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். இது நியூஸிலாந்து கூடுதல் பலமாக கருதப்படுகிறது.
முன்னதாக நடந்த பயிற்சி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியிடம் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதனை அடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான லீக் சுற்றும் மழையால் தடைபட்டது. தற்போது இரு அணிகளும் நேரடியாக அரையிறுதியில் மோதுவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அரையிறுதிக்கு முந்தைய பயிற்சியின் போது விராட் கோலி, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவைப் போல பந்து வீசி கிண்டல் செய்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
Virat kohli in & an as Bumrah !! 😀😃😃 #INDvNZ #CWC19 #ViratKohli #Bumrah pic.twitter.com/oAJdouWUqW
— Harshal Gadakh 🇮🇳 (@harshalgadakh7) July 9, 2019
