‘இவர் இல்லாமதான் விளையாட போறோம்’.. வெளியான தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கான இந்திய வீரர்கள் பட்டியல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Sep 12, 2019 06:14 PM

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய வீரர்களின் பட்டியிலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

Indian test squad for South Africa series announced

தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. இதில் இளம் வீரர் சுபமன் ஹில்லிற்கு புதிதாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர்.

இதில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சொதப்பிய கே.எல்.ராகுல் நீக்கப்பட்டுள்ளார். அதனால் தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் ஷர்மா இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விக்கெட் கீப்பர்களான ரிஷப் பந்த் மற்றும் சாஹா ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

Tags : #BCCI #MSDHONI #VIRATKOHLI #KLRAHUL #RISHABHPANT #INDVSA #TEST #TEAMINDIA #CRICKET #ROHITSHARMA