கேப்டன் 'அவரை' திரும்பவும் டீம்ல எடுக்க... ஏதாவது வழி இருக்கா?... 'கோலியை' துளைத்தெடுக்கும் ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசமீப காலங்களில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக கே.எல்.ராகுல் உருவெடுத்து இருக்கிறார். எந்த இடத்தில் இறக்கி விட்டாலும் அணியின் ஸ்கோரை அதிரடியாக உயர்த்தி விடுவதால் கேப்டன் விராட் கோலி அவர்மீது மிகுந்த நம்பிக்கை வைத்து விக்கெட் கீப்பிங் பணியையும் அளித்திருக்கிறார்.

குறிப்பாக இன்றைய போட்டியில் அவரின் அதிரடி ஆட்டத்தை பார்த்த ஐபிஎல் ரசிகர்கள் எப்படியாவது அவரை மீண்டும் பெங்களூர் அணிக்கு எடுக்க வேண்டும் என்று ட்விட்டரில் அடம்பிடித்து வருகின்றனர். உச்சகட்டமாக பெங்களூர் அணியின் ட்விட்டர் பக்கத்தில் கே.எல்.ராகுலை புகழ, அவர் அணியில் இல்லை என்பதை நினைக்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது என ரசிகர்கள் பதிலளித்து உள்ளனர்.
It hurts when @RCBTweets tweet about @klrahul11 😢
— ANINDITA🇮🇳 (@aninditavirat18) January 24, 2020
பெங்களூர் அணியில் இருந்து வரையில் பெரிதும் ஜொலிக்காத ராகுல் பஞ்சாப் அணிக்கு சென்றபின் ஓபனிங் பேட்ஸ்மேனாக மாறினார். தொடர்ந்து இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அணியின் கேப்டனாகவும் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
