இன்னைக்கு 'நம்ம' பசங்க... ரன் 'அடிக்கிறாங்கன்னு' கொண்டாடறீங்களே... அதுக்கெல்லாம் 'வெதை' போட்டது யாரு தெரியுமா?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Jan 24, 2020 09:34 PM

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், விராட் கோலி ஆகியோரின் அதிரடியால் எளிதில் வெற்றி பெற்றது. கே.எல்.ராகுல் 56 ரன்கள் அடிக்க, ஷ்ரேயாஸ் தன்னுடைய பங்குக்கு 58 ரன்கள் அடித்து அணிக்கு வெற்றியை தேடித்தந்தார்.

IND Vs NZ: Netizens Praised Rahul Dravid, details here

இந்த நிலையில் நெட்டிசன்கள் தற்போது ராகுல் டிராவிட் குறித்து ட்விட்டரில் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அதில் ராகுல் டிராவிட் பயிற்சியளித்த கே.எல்.ராகுல், மணீஷ் பாண்டே, சஞ்சு சாம்சன், மயங்க் அகர்வால், அஜிங்கியா ரஹானே, பிரித்வி ஷா, இஷான் கிஷான், சுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற இளம்வீரர்கள் இன்று ஒரு போட்டியை வெற்றிகரமாக முடிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளதாக பாராட்டி வருகின்றனர்.