'ஏன் தோனி, தோனின்னு இருக்கீங்க'... 'அவர் இடத்துக்கு ஒருத்தர் வந்தாச்சு'... கொளுத்தி போட்ட பிரபல வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Jeno | Jan 22, 2020 09:06 AM

முன்னாள் இந்திய கேப்டன் தோனியின் இடத்தை நிரப்ப இளம் வீரர் இந்திய அணியில் வந்து விட்டதாக முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார். அவரின் இந்த கருத்து தோனி ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

India have found MS Dhoni’s replacement, says Shoaib Akhtar

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, இந்திய அணியில் இடம்பெறாத நிலையில், அவர் விரைவில் ஓய்வு பெறலாம் என்ற யூகங்கள் உலா வந்த வண்ணம் உள்ளது. ஆனால் உலகக்கோப்பையை பெற்று தந்த கேப்டனை இப்படியா வழி அனுப்புவது என கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் தங்களது ஆதங்கத்தை கொட்டி தீர்த்து வருகிறார்கள். இந்நிலையில் தோனிக்கு மாற்றாக மணீஷ் பாண்டே சிறப்பாக செயல்படுவதாகவும், ஸ்ரேயாஸ் ஐயரும் சிறப்பாக விளையாடுவதாகவும் சோயிப் அக்தர் கூறியுள்ளார்.

இதுகுறித்து தன்னுடைய யூ-டியூப் சேனலில் பேசியுள்ள அவர், '' இந்திய அணியில் புதிய இளம் வீரர்களுக்கு அதிகளவில் வாய்ப்புகள் அளிக்கப்பட்டு, அவர்களின் திறன்கள் சோதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஐபிஎல் போட்டிகளை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி கொண்டதாக கேப்டன் கோலியே கூறியுள்ளார். இந்த வாய்ப்பை சில இளம் வீரர்கள் நன்றாக பயன்படுத்தி கொண்டார்கள். தோனிக்கு மாற்று வீரராக ரிஷப் பந்த்தை பலரும் கூறி வருகிறார்கள். ஆனால் அவருக்கு பல வாய்ப்புகள் கொடுக்கப்பட்டும் அவர் அதனை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை.

இந்நிலையில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் முன்னாள் மணீஷ் பாண்டே சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஸ்ரேயாஸ் ஐயரும் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி சிறப்பான பேட்டிங்யை வெளிப்படுத்தியுள்ளார். அதே நேரத்தில் கே.எல். ராகுலும் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை நன்றாக பயன்படுத்தி வருகிறார்.

மேலும் மணீஷ் பாண்டே மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளதால் நெருக்கடியான சூழ்நிலையை சமாளிக்கும் திறனை பெற்றுள்ளார்கள். எனவே மணீஷ் பாண்டே நிச்சயம் தோனிக்கு மாற்று வீரராக இருப்பார், என சோயிப் அக்தர் கூறியுள்ளார். அக்தரின் இந்த பேச்சு தோனி ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CRICKET #BCCI #MSDHONI #SHOAIB AKHTAR