’தோனி கிரிஸில் இருக்கும்போது பௌலர்ஸ்க்கு அள்ளு விட்ரும்’.. புகழ்ந்து தள்ளிய வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | May 03, 2019 11:21 AM

தல தோனி பற்றி சின்ன தல ரெய்னா புகழாரம் சூட்டியுள்ளார்.

IPL 2019 CSK Player Suresh Raina Praises Captain MS Dhoni

டெல்லியுடன் அண்மையில் விளையாண்ட சென்னை அணி, டெல்லியை 99 ரன்களில் சுருட்டியது. தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங்கும் இதற்கு ஒரு முக்கியக் காரணம். இதுபற்றி ரெய்னா, மிகவும் மனம் நெகிழ்ந்து பேசியுள்ளார்.

குறிப்பாக ஒரு அணியை கேப்டன் தோனியின் இருப்பு இன்றி வழிநடத்துவதில் உள்ள சவாலை குறிப்பிட்டு பேசிய ரெய்னா, ஒரு கேப்டனாக இல்லாவிடினும், ஒரு பேட்ஸ்மேனாக அவரின் இல்லாமை சற்றே கடினமான ஒன்றாக இருக்கும் என்று பேசிய ரெய்னா, தோனி கிரிஸுக்குள் இருந்தாலே, பௌலருக்கு வழக்கத்தை விட கூடுதல் நெருக்கடிதான், ஆனால் அவர் இல்லாதபோது அதை தங்களால் உணர முடிவதாகவும் கூறினார்.

ஸ்ரேயாஸ் விக்கெட்டை கைப்பற்றியதும், மோரீஸின் விக்கெட்டை கைப்பற்றியதும் என இந்த 2 அசத்தலான ஸ்டெம்பிங் போதும் தோனியின் ஈடுபாட்டுக்கு உதாரணமாக என்றும் ரெய்னா தோனிக்கு புகழாரம் சூட்டினார். இதேபோல் டெல்லி அணியின் கேப்டன் பேசும்போது, தோனி களத்தில் இருந்தால் தங்களது பௌலர்களை குறை சொல்ல முடியாது என்றும், அவர் ஒரு ஆட்டத்தையே ஒரு பந்தில் தட்டென மாற்றிவிடக்கூடியவர் என்றும் புகழ்ந்துள்ளார்.