வியாழக்கிழமை மேட்ச்.. சாய்பாபா கோவிலில் வழிபாடு செய்த இந்திய கிரிக்கெட் வீரர்.. IND VS AUS
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் நாளை துவங்க இருக்கிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் கேஎல் ராகுல் அருகில் உள்ள சாய் பாபா கோவிலில் வழிபாடு செய்திருக்கிறார்.

Images are subject to © copyright to their respective owners.
Also Read | 72 பேர் பலியான நேபாள விமான விபத்துக்கு இதுதான் காரணமா?.. விசாரணைக்குழு வெளியிட்ட பகீர் தகவல்..!
நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர் மற்றும் டி 20 தொடரை சிறப்பாக முடித்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் விளையாட உள்ளது. 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் மற்றும் 3 ஒரு நாள் போட்டி தொடரை ஆடுவதற்காக ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு வந்துள்ளது. இதில், முதலாவதாக டெஸ்ட் தொடர் ஆரம்பமாக உள்ளது. இதன் முதல் டெஸ்ட் போட்டி, பிப்ரவரி 09 ஆம் தேதியன்று ஆரம்பமாகிறது. அதன் பின்னர் டெல்லி, தரம்சாலா மற்றும் அகமதாபாத்தில் அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகள் நடைபெற இருக்கின்றன.
Images are subject to © copyright to their respective owners.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி வாய்ப்பு என்பது இந்தியா அணிக்கு இந்த டெஸ்ட் தொடரில் வெல்வது மூலம் தான் கைக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், வியூகம் அமைத்து ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தவும் இந்திய கிரிக்கெட் அணி தயாராகி வருகிறது. முன்னதாக, 2018 - 19 ஆம் ஆண்டிலும், 2020 - 21 ஆம் ஆண்டிலும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றிருந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்று வரலாறு படைத்திருந்தது.
Images are subject to © copyright to their respective owners.
இந்நிலையில் இந்திய அணியின் துணை கேப்டன் கேஎல் ராகுல் நாக்பூரில் உள்ள சாய் பாபா கோவில் ஒன்றில் வழிபாடு நடத்தியுள்ளார். கோவிலுக்குள் ராகுல் வலம்வரும் புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி தனது குடும்பத்தினருடன் ரிஷிகேஷ் சென்றிருந்தார். அங்கு யாத்திரை செய்த புகைப்படத்தை கோலி பகிர அந்த புகைப்படங்கள் வைரலாகியது குறிப்பிடத்தக்கது.
Also Read | இந்த பாட்டு வேண்டாம்.. கல்யாண வீட்டுல வந்த தகராறு.. வாலிபருக்கு நேர்ந்த சோகம்..!

மற்ற செய்திகள்
