KL ராகுலின் இமாலய சிக்ஸ்.. எதிரே நின்ன விராட் கோலி கொடுத்த ரியாக்ஷன்.. வைரலாகும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவங்கதேசம் அணியுடனான போட்டியில் ராகுல் அடித்த சிக்சரை பார்த்து, விராட் கோலி கொடுத்த ரியாக்ஷன் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.

Also Read | காதலனுக்கு கஷாயத்தில் விஷம்.. இணையத்தில் காதலி Search செய்த விஷயம்.. வெளியான திடுக்கிடும் தகவல்..!
T20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 12 சுற்று போட்டிகள், இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு நடைபெற்று வரும் நிலையில், எந்த அணி அரை இறுதிக்கு முன்னேறும் என்பது குறித்த விறுவிறுப்பு தற்போதே அதிகரித்துள்ளது. இதில், ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி குரூப் 2 வில் இடம்பெற்றுள்ளது. முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இருந்த இந்திய அணி, இரண்டாவது போட்டியில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி இருந்தது. இதனைத் தொடர்ந்து, மூன்றாவது போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியிடம் தோல்வியைடைந்திருந்தது இந்திய கிரிக்கெட் அணி.
அரையிறுதிக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்த இந்திய அணி இன்று வங்கதேசத்தை எதிர்கொண்டது. அடிலெய்டில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 186 ரன்கள் எடுத்திருந்தது. இதில் விராட் கோலி ஒரு சிக்ஸர் மற்றும் 8 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் குவித்தார். முதல் மூன்று போட்டிகளிலும் பெரிதும் சோபிக்காத ராகுல் இந்த போட்டியில் அபாரமாக ஆடி அரை சதமடித்தார்.
இதனையடுத்து 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம் ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. துவக்க ஆட்டக்காரரான லிட்டன் தாஸ் 27 பந்துகளில் 60 ரன்கள் குவித்தார். இதனிடையே மழை குறுக்கிட்டதால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் போட்டி 16 ஓவர்களாகவும் டார்கெட் 151 ஆகவும் மாற்றப்பட்டது. இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகி பெவிலியன் திரும்பினர். பரபரப்பாக சென்ற இந்தப் போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் இந்தியா பேட்டிங் செய்கையில் 9 வது ஓவரை ஷோரிஃபுல் இஸ்லாம் வீசினார். அப்போது ஸ்ட்ரைக்கில் இருந்த ராகுல் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்டார். அப்போது எதிரே நின்றிருந்த விராட் கோலி இதனை பார்த்து ஷாக் ஆகி அப்படியே நின்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
— Guess Karo (@KuchNahiUkhada) November 2, 2022
Also Read | 88-வது கல்யாணத்துக்கு ரெடியான 61 வயசு தாத்தா.. மணப்பெண் யாருன்னு பாத்துட்டு ஷாக் ஆன மக்கள்..

மற்ற செய்திகள்
