ராகுலுக்கு கல்யாணம்??.. இணையத்தில் வலம் வந்த தகவல்.. "என்னையும் கூப்பிடுவாங்க போல.." நடிகையின் வேற மாதிரி பதில்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியில் பிரபலமான வீரர்களில் ஒருவர் கே எல் ராகுல். இவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக, தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கவில்லை.

Also Read | மொத்தமா 1800 பேர்.. திடீரென வீட்டுக்கு அனுப்பிய முன்னணி நிறுவனம்.. வருத்தத்தில் ஊழியர்கள்.. பின்னணி என்ன??
இதனால் கே எல் ராகுலுக்கு தற்போது ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சைக்காக அவர் முனீச் சென்றுள்ளார். அவருடன் அவரது நெருங்கிய தோழியான நடிகை அதியா ஷெட்டியும் உடன் சென்றுள்ளார்.
இந்நிலையில், கே எல் ராகுல் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக இணையத்தில் வலம் வந்தது. தற்போது இதன் உண்மை நிலவரம் என்ன என்பது குறித்து சில அதிகாரபூர்வ தகவல்களும் கிடைத்துள்ளது.
சுற்றித் திரியும் ராகுல் - அதியா ஜோடி
பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகளான நடிகை அதியா ஷெட்டி மற்றும் கே எல் ராகுல் ஆகியோர், கடந்த சில ஆண்டுகளாகவே ஒன்றாக சுற்றித் திரிந்து வருகின்றனர். இருவரும் பல இடங்களுக்கு சென்று, புகைப்படங்கள் வெளியிடுவது என இந்த ஜோடி ஒன்றாக நேரம் செலவிட்டு வருகிறது. அதே போல, கடந்த ஆண்டு தங்களின் காதலையும் ஏறக்குறைய அதிகாரபூர்வமாக அதியா - ராகுல் ஜோடி அறிவித்திருந்தது.
3 மாசத்துல கல்யாணமா??
இதற்கு மத்தியில், ராகுல் மற்றும் அதியா ஆகியோர், அடுத்த மூன்று மாதத்தில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் இணையத்தில் வட்டமிட தொடங்கியது. அது மட்டுமில்லாமல், மிகவும் விமரிசையாக இவர்களின் திருமணம், மும்பையில் வைத்து நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியானது. கடந்த சில மாதாங்களாகவே, ராகுல் - அதியா திருமணம் பற்றி அவ்வப்போது தகவல்கள் வெளியாகி கொண்டே இருந்தது. இதனைத் தொடர்ந்து, ராகுலுடன் மூன்று மாதம் கழித்து நடைபெறவுள்ள திருமணம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகை அதியா ஷெட்டி.
உண்மை நிலவரம் என்ன?
தனது இன்ஸ்டா ஸ்டோரியில், "இன்னும் 3 மாதத்தில் நடைபெறவுள்ள திருமணத்திற்க்கு நான் அழைக்கப்படுவேன் என நம்புகிறேன்" என நக்கலாக குறிப்பிட்டுள்ளார். இதனால், ராகுல் - அதியா திருமணம் மூன்று மாதத்தில் நடைபெறவுள்ளது வதந்தி தான் என்பது உறுதியாகி உள்ளது.
அதே போல, அதியா ஷெட்டியின் தந்தையும் நடிகருமான சுனில் ஷெட்டியும், தனது மகள் திருமணம் குறித்து வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை என்றும், எந்த ஏற்பாடுகளும் இதுவரை செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
Also Read | "பூமியில் தென்பட்ட பால் கடல்.." முதல் முறையாக கிடைத்த அரிய புகைப்படம்.. வியப்பில் மக்கள்!!

மற்ற செய்திகள்
