Maha others

"ரூ.33 லட்சம் சம்பளம்".. CODING போட்டியில வென்ற இந்தியர்.. வயச கேட்டு ஆடிப் போன அமெரிக்க நிறுவனம்.. இப்பவே இப்படியா..?

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Jul 25, 2022 11:27 AM

அமெரிக்க நிறுவனம் ஒன்று கோடிங் போட்டியில் வென்ற இந்தியரின் வயதை கேட்ட பிறகு அதிர்ச்சி அடைந்திருக்கிறது.

Nagpur Teen Wins Coding Contest Gets US Job Offer

Also Read | சாலை ஓரத்துல கிடந்த Bag.. உள்ள கட்டுக்கட்டா பணம்.. கொஞ்சம் கூட யோசிக்காம போலீஸ் கான்ஸ்டபிள் செஞ்ச காரியத்தால் நெகிழ்ந்துபோன அதிகாரிகள்..!

சமீப காலங்களில் கோடிங் கற்றுக்கொள்ள இளைஞர்களிடையே மிகுந்த ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. இணைய வெளிகளில் குறைந்த கட்டணங்களில் கோடிங் கற்றுத்தரவும் பல நிறுவனங்கள் வந்துவிட்டன. கற்றுக்கொள்பவர்களுக்கு கைநிறைய சம்பளம் கிடைப்பதால் இளைஞர்களும் ஆர்வத்துடன் இதனை கற்று வருகின்றனர். அதுமட்டும் அல்லாமல் பள்ளி செல்லும் மாணவர்களும் கோடிங் கற்றுக்குக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். அப்படி ஒருவர் தான் அமெரிக்க ஐடி நிறுவனத்துக்கு ஷாக் கொடுத்திருக்கிறார்.

போட்டி

அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் இயங்கி வரும் பிரபல ஐடி நிறுவனம் ஒன்று சமீபத்தில் கோடிங் போட்டியை நடத்தியிருக்கிறது. இதில் பங்கேற்று வெற்றி பெறுபவர்களுக்கு வேலை கொடுக்கவும் அந்த நிறுவனம் தயாராக இருந்திருக்கிறது. இதனை தொடர்ந்து இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் இந்த கோடிங் போட்டி குறித்த விளம்பரங்களை அந்நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

இந்நிலையில் நாக்பூரை சேர்ந்த வேதாந்த் தியோகேட் என்ற 15 வயது சிறுவன் தன்னுடைய அம்மாவின் லேப்டாப்பில் இன்ஸ்டாகிராம் உபயோகித்தபோது இந்த விளம்பரத்தை பார்த்திருக்கிறார். இதனை தொடர்ந்து, அந்த போட்டிக்கு விண்ணப்பித்திருக்கிறார் வேதாந்த். அவருக்கு கொடுக்கப்பட்ட பணியை 2 நாட்களில் அவர் முடித்திருக்கிறார். இரண்டே நாட்களில் 2000 கோடிங் வரிகளை அவர் எழுதியுள்ளார்.

Nagpur Teen Wins Coding Contest Gets US Job Offer

33 லட்சம் சம்பளம்

இதனை அறிந்த நிறுவனம், HRD துறையில் கோடிங் செய்யும் ஊழியர்களை நிர்வகிக்கும் பொறுப்பை வழங்குவதாகவும் ஆண்டுக்கு 33 லட்ச ரூபாய் சம்பளம் கொடுக்க தயாராக இருப்பதாகவும் வேதாந்திடம் தெரிவித்திருக்கிறது. அப்போது, வேதாந்த் தன்னுடைய வயதை கூறியவுடன் நிறுவனமே அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது.  மேலும். தன்னுடைய வேலை குறித்த அறிவிப்பையும் வாபஸ் பெற்றிருக்கிறது நிறுவனம்.

இருப்பினும், மனம் தளரவேண்டாம் எனவும் படிப்பை முடித்தபிறகு மீண்டும் தங்களை தொடர்புகொள்ளும்படி அந்த நிறுவன அதிகாரிகள் வேதாந்திடம் கூறியிருக்கிறார்கள். இது பலரையும் திகைப்படைய செய்திருக்கிறது.

Also Read | சாலையின் ரெண்டு பக்கமும் நிறுத்தப்பட்ட வாகனங்கள்.. "கடைசி'ல சும்மா கெத்தா குடுத்த என்ட்ரி'ய பாக்கணுமே.." வியக்க வைத்த வீடியோ

Tags : #NAGPUR #CODING CONTEST #US JOB OFFER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Nagpur Teen Wins Coding Contest Gets US Job Offer | India News.