இந்த பாட்டு வேண்டாம்.. கல்யாண வீட்டுல வந்த தகராறு.. வாலிபருக்கு நேர்ந்த சோகம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபீகார் மாநிலத்தில் கல்யாணத்தின் போது ஏற்பட்ட தகராறு காரணமாக ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலத்தையே உலுக்கியுள்ளது.

Images are subject to © copyright to their respective owners.
Also Read | "மொதல்ல இத Delete பண்ணுங்கப்பா".. ரசிகர் கேட்ட கேள்வி.. தினேஷ் கார்த்திக் கொடுத்த வைரல் ரியாக்ஷன்!!
பீகார் மாநிலத்தின் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள பக்ரி எனும் கிராமத்தில் கடந்த திங்கட்கிழமை திருமணம் ஒன்று நடைபெற்றது. அப்போது இசைக் கச்சேரி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. திருமணத்திற்கு இரு வீட்டாரும் கூடிய நிலையில் ஊர்வலம் நடைபெற்றிருக்கிறது. அப்போது, தங்களுக்கு பிடித்த பாடல்களை பாடுமாறு மாப்பிள்ளை தரப்பினர் சிலர் கேட்டதாக தெரிகிறது. இந்த விவகாரம் வாக்குவாதமாக மாற, கொஞ்ச நேரத்தில் கலகலப்பு வரையில் இந்த விஷயம் சென்றிருக்கிறது.
இந்த சூழ்நிலையில் கல்யாணத்தில் கலந்துகொண்ட சிலர் துப்பாக்கியால் சுட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் இளைஞர் ஒருவர் காயமடைந்திருக்கிறார். உடனடியாக அவர் ஆரா சதர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். இந்நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றிருக்கின்றனர்.
Images are subject to © copyright to their respective owners.
உயிரிழந்த நபர் கிழக்கு மத்திய இரயில்வேயின் பண்டிட் தீன் தயாள் உபாத்யாயா இரயில் பிரிவில் இளநிலை பொறியாளராக பணிபுரிந்துவந்த அபிஷேக் சிங் என்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இதனை தொடர்ந்து அபிஷேக்கின் உடலை காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவர்கள் அனுப்பி வைத்திருக்கின்றனர்.
இதுகுறித்து பேசிய போஜ்பூர் எஸ்பி ப்ரோமோத் குமார்,"கடந்த திங்கட்கிழமை இரவு கிருஷ்ணகர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் திருமண விழா நடைபெற்றிருக்கிறது. இதில் இசைக் கச்சேரி நடத்தப்பட்டு உள்ளது. அப்போது, சிலர் பாடல்களை மாற்றுமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இதுவே தகராறு ஏற்பட காரணமாக அமைந்திருக்கிறது. அப்போது ஒருவர் துப்பாக்கியால் சுட அபிஷேக் என்பவர் உயிரிழந்திருக்கிறார். கொலை செய்தவரை அடையாளம் கண்டுள்ளோம். இதுகுறித்த நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என்றார்.
Images are subject to © copyright to their respective owners.
திருமணத்தின் போது ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read | 72 பேர் பலியான நேபாள விமான விபத்துக்கு இதுதான் காரணமா?.. விசாரணைக்குழு வெளியிட்ட பகீர் தகவல்..!

மற்ற செய்திகள்
