சாமி காப்பாத்திட்ட.. கோலி விட்ட கேட்சை கச்சிதமாக எடுத்த பண்ட்... கையெடுத்து கும்பிட்ட KL ராகுல்.. வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவிராட் கோலி தவறவிட்ட கேட்சை கச்சிதமாக பிடித்த பண்டை ராகுல் வித்தியாசமான முறையில் பாராட்டியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை டி20 தொடர் முடிவடைந்த நிலையில் இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டது. இதனையடுத்து, வங்க தேசத்திற்கு சென்ற இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வங்க தேசம் கைப்பற்றியிருந்தது. இந்நிலையில், சாட்டோகிராம் மைதானத்தில் இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ராகுல் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து, இந்திய அணி வீரர்கள் முதல் இன்னிங்சில் விளையாடினர். இந்திய அணியில் அதிரடியாக விளையாடிய பண்ட் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நிதானமாக விளையாடிய புஜாரா 90 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். அதேபோல, ஷ்ரேயாஸ் அய்யர் விளையாடி 86 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதேபோல அஷ்வின் இறுதியில் நிதானமாக ஆடி அரைசதம் எடுத்தார். இதனையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 404 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சில் களமிறங்கிய வங்கதேசம் 150 ரங்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆகவே, இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்க்ஸை ஆடியது. அதில் துவக்க ஆட்டக்காரர் கில் சதமடித்து அசத்தினார். அதேபோல, துணை கேப்டன் புஜாரா அபாரமாக ஆடி சதம் விளாசினார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருடைய 19 வது சதமாகும். 130 பந்துகளில் 102 ரன்களை அவர் எடுத்தபோது டிக்ளேர் செய்வதாக இந்திய அணி கேப்டன் ராகுல் அறிவித்தார்.
அதன்பிறகு வங்கதேச அணி தற்போது தனது இரண்டாவது இன்னிங்சில் ஆடி வருகிறது. இதில், துவக்க ஆட்டக்காரரான ஷாண்டோ உமேஷ் யாதவின் பந்தை எதிர்கொண்டார். அப்போது பந்து எட்ஜாகி முதல் ஸ்லிப்பில் நின்றிருந்த கோலியிடம் சென்றது. அதனை அவர் கேட்ச் எடுக்க முயற்சிக்கும்போது பந்து அவரது கைகளில் இருந்து நழுவி சென்றது. அப்போது, அருகே நின்றிருந்த கீப்பரான பண்ட் கச்சிதமாக அந்த கேட்சை எடுத்தார்.
இதனை கண்டு உற்சாகத்துடன் ஓடிவந்த அணியின் கேப்டன் ராகுல் பண்டை நோக்கி கையெடுத்து கும்பிட்டபடி சைகை செய்தார். இந்த வீடியோ தற்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.
Brilliant Catch From Rishabh Pant! 🫡
Virat Kohli dropped this🫠#BANvIND #INDvsBAN #RishabhPant pic.twitter.com/KtecqzFZE2
— Divyansh khanna (@meme_lord2663) December 17, 2022

மற்ற செய்திகள்
