"இத மட்டும் கோலி பண்ணிட்டா.. எல்லார் வாயையும் மூடிடலாம்".. ரவி சாஸ்திரி சொன்ன பரபரப்பு கருத்து!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகே எல் ராகுல் தலைமையிலான இந்திய அணி, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை, 3 - 0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தி இருந்தது.

Also Read | ஆபரேஷன் முடிஞ்சதும் கெடச்ச கண் பார்வை.. "முதல் முறையா காதலன பாத்ததும்".. இளம்பெண் சொன்ன விஷயம்
இதனைத் தொடர்ந்து, ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் பார்வையும் தற்போது ஆசிய கோப்பை மீது தான் திரும்பி உள்ளது.
ஆகஸ்ட் 27 ஆம் தேதி ஆரம்பமாக உள்ள ஆசிய கோப்பைத் தொடரில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள், ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளது.
இரு அணிகளும் தங்களின் முதல் லீக் போட்டியில், ஆகஸ்ட் 28 ஆம் தேதி மல்லுக்கட்ட உள்ளது. கடந்த ஆண்டு, டி 20 உலக கோப்பை போட்டிக்கு பிறகு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளதால், இருநாட்டு ரசிகர்களும் போட்டியைக் காண மிகுந்த ஆவலுடன் உள்ளனர். அதே வேளையில், இந்திய ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் நிபுணர்கள் தொடர்ந்து பேசி வருவது கோலியின் ஃபார்ம் குறித்து தான்.
சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகியும், இதுவரை சர்வதேச போட்டியில் ஒரு சதம் கூட கோலி அடிக்கவில்லை. அது மட்டுமில்லாமல், சமீபத்திய தொடர்களில் ரன் குவிக்கவும் கோலி தடுமாறி வந்தார். இதனால், அவர் மீது ஏராளமான விமர்சனங்கள் எழுந்தன. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்மபவே தொடர்களில் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்த நிலையில், ஆசிய கோப்பையில் தனது ஃபார்மை நிரூபிப்பார் என்ற நம்பிக்கையிலும் ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி, கோலியின் ஃபார்ம் குறித்து சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
"இது பற்றி கோலியிடம் நான் இதுவரை பேசவே இல்லை. பெரிய வீரர்களுக்கு சற்று ஓய்வு கிடைத்தால் எதில் தவறு செய்கிறோம் என்பது தெரிந்து விடும். உலகில் எந்த வீரரும் கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டது இல்லை என கூறிவிட முடியாது. அனைவரும் கடினமான சூழ்நிலைகளை கடந்து தான் வந்திருக்கிறார்கள். அப்படி ஒரு விஷயம், தற்போது கோலிக்கு நடந்துள்ளது. அனைத்தையும் சரி செய்து விட்டு, கோலி திரும்ப வருவார்.
ஓய்வின் மூலம் கோலி மனதில் இருந்த பிரச்சனைகள் மாறி இருக்கும் என நம்புகிறேன். ஆசிய கோப்பையில், முதல் போட்டியிலேயே அவர் அரை சதமடித்து விட்டால், அதன் பிறகு அனைவரின் வாயையும் மூடிவிட முடியும். கோலியால் முடியும் என நம்புகிறேன்" என ரவி சாஸ்திரி கூறி உள்ளார்.
ரவி சாஸ்திரி கூறியது போல, கடந்த கால விமர்சனங்களை களைந்து, ஆசிய கோப்பையில் பழைய ஃபார்முக்கு கோலி திரும்புவார் என்று தான் ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.
Also Read | முதல் முறையா Escalator ஏறிய பெண்கள்.. "எறங்குறப்போ அவங்க பண்ண விஷயம் தான் செம".. வைரல் வீடியோ!!

மற்ற செய்திகள்
