பறிபோன FINALS வாய்ப்பு.. ஒரே ஒரு எமோஜி போட்டு KL ராகுல் பகிர்ந்த ஃபோட்டோ!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்து அணிக்கு எதிராக டி 20 உலக கோப்பைத் தொடரின் அரையிறுதி போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் கடும் வேதனையை ஏற்படுத்தி இருந்தது.
![KL Rahul posts a picture with emoji in social media after defeat KL Rahul posts a picture with emoji in social media after defeat](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/sports/kl-rahul-posts-a-picture-with-emoji-in-social-media-after-defeat.jpg)
Also Read | கை நழுவி போன உலக கோப்பை வாய்ப்பு.. வெளியேற பிறகு உருக்கத்துடன் விராட் பகிர்ந்த ட்வீட்!!
கடந்த ஆண்டு டி 20 உலக கோப்பைத் தொடரில் லீக் சுற்றுடன் வெளியேறி இருந்த நிலையில், பலம் வாய்ந்த அணியாகவும் நடப்பு உலக கோப்பை தொடரில் இந்திய அணி களமிறங்கி இருந்தது.
சூப்பர் 12 சுற்றில் தங்கள் பிரிவில் முதலிடம் பிடித்திருந்த இந்திய அணி, தங்களின் அரையிறுதி போட்டியில் நேற்று (10.11.2022) இங்கிலாந்து அணியை சந்தித்திருந்தது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 168 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி, 16 ஓவர்களில் ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் இலக்கை எட்டி இருந்தது. முழுக்க முழுக்க இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தி இருந்ததால் இந்திய ரசிகர்கள் நொந்து போயினர். பல கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் நிபுணர்கள் கூட இந்திய அணியின் தோல்வி குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தோல்விக்கு பிறகு இந்திய அணியின் தொடக்க வீரர் கே எல் ராகுல் தனது சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படத்தை பகிர்ந்து எமோஜி ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
இந்திய அணியின் தொடக்க வீரராக நடப்பு டி 20 உலக கோப்பைத் தொடரில் களமிறங்கி வந்தார். இரண்டு போட்டிகளில் அரை சதமடித்திருந்த கே எல் ராகுல், மற்ற போட்டிகளில் பெரிதாக ரன் சேர்க்கவில்லை. இது தொடர்பாக கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் நிபுணர்கள் கூட கருத்து தெரிவித்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, தற்போது உலக கோப்பை தொடரின் இறுதி போட்டியில் முன்னேறாமல் அரை இறுதியில் வெளியேறியதால் வீரர்கள் அனைவரும் கலங்கி போயினர். ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் மைதானத்தில் இருக்கும் போதே கண் கலங்கி போன விஷயம், ரசிகர்களை கூட அதிகம் கவலைப்பட வைத்திருந்தது.
இதனிடையே, இந்திய வீரர்கள் தேசிய கீதம் படும் போது மைதானத்தில் நிற்கும் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளார் வீரர் கே எல் ராகுல். மேலும் தனது கேப்ஷனில் இதயம் உடைந்தது போல ஒரே ஓரு எமோஜியை (💔) மட்டும் குறிப்பிட்டுள்ளார். ராகுலின் பதிவின் கீழ் ரசிகர்கள் பலரும் பல விதமான கமெண்ட்டுக்களையும் குறிப்பிட்டு வருகின்றனர்.
Also Read | இறந்த பெண்ணின் உடலுடன் 3 நாட்கள் இருந்த குடும்பம்.. காரணத்த கேட்டு நடுங்கிய அக்கம் பக்கத்தினர்!!
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)