72 பேர் பலியான நேபாள விமான விபத்துக்கு இதுதான் காரணமா?.. விசாரணைக்குழு வெளியிட்ட பகீர் தகவல்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉலகத்தையே உலுக்கிய நேபாள விமான விபத்து குறித்து விசாரணை செய்துவந்த குழு முதற்கட்ட தகவல்களை வெளியிட்டுள்ளது.

Images are subject to © copyright to their respective owners.
கடந்த ஜனவரி மாதம் 15 ஆம் தேதி எட்டி ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று, சுமார் 68 பயணிகள் மற்றும் 4 விமான ஊழியர்களுடன் நேபாளத்தின் பொக்காரா விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டுள்ளது. அப்போது தரையிறங்கும் போது ஒரு சில நிமிடங்கள் முன்பாக திடீரென தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் இந்தியர்கள் 5 பேர் உட்பட அனைவரும் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. முன்னதாக, தரையிறங்க சில நிமிடங்கள் இருக்கும் போது தொழில்நுட்ப கோளாறு உருவானதால் தரையில் மோதி விபத்து நடந்ததாகவும் சொல்லப்பட்டது. அதே போல, அங்கே நிலவிய கால நிலையும் விமான விபத்துக்கு ஒரு காரணமாக இருக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
Images are subject to © copyright to their respective owners.
பின்னர், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. அதன்மூலம் விமானத்தில் பயணித்த 72 பேரின் உடலையும் மீட்புக்குழு கைப்பற்றியது. விபத்து நடந்த விமானத்தில் பயணம் மேற்கொண்ட இந்தியர் ஒருவர், விபத்து நடக்க கொஞ்ச நேரம் முன்பு அவர் எடுத்த லைவ் வீடியோ, இணையத்தில் அதிகம் வைரலாகியது குறிப்பிடத்தக்கது.
Images are subject to © copyright to their respective owners.
விபத்து குறித்து ஆராய விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த விசாரணைக்குழு விமானத்தின் கருப்புப் பெட்டியை கண்டுபிடித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தது. அதன்மூலம் விமானத்தின் இரண்டு என்ஜின்களும் பழுதடைந்ததன் காரணமாக விபத்து ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இரண்டு என்ஜின்களும் பழுதடைந்ததன் காரணம் குறித்து அதிகாரிகள் தொடர் ஆய்வில் இறங்கியுள்ளனர்.

மற்ற செய்திகள்
