விரைவில் கே எல் ராகுலுக்கு திருமணம்?.. வெளியான அசத்தல் தகவல்.. வைரல் ஆக்கும் கிரிக்கெட் ரசிகர்கள்!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்திய அணியின் சிறந்த தொடக்க வீரராக இருப்பவர் கே எல் ராகுல். சமீபத்தில் நடந்து முடிந்த டி 20 உலக கோப்பைத் தொடரில் இந்திய அணிக்காக கே எல் ராகுல் களமிறங்கி இருந்தார்.

Also Read | நெஹ்ரா பின்னாடி ஒளிஞ்சு நின்ன இந்திய வீரர்.. அடுத்த நிமிஷமே நடந்த சம்பவம்.. "சேட்ட புடிச்ச ஆளா இருப்பாரோ?
இதனைத் தொடர்ந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய தொடர்களில் இருந்து கே எல் ராகுலுக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்தது.
தற்போது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையே ஒரு நாள் மற்றும் டி 20 தொடர்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், அடுத்ததாக வங்காளதேச அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர் மற்றும் டெஸ்ட் போட்டி தொடரிலும் இந்திய அணி மோத உள்ளது.
முதலாவதாக ஒரு நாள் தொடர், டிசம்பர் நான்காம் தேதி ஆரம்பமாக உள்ள நிலையில், இதற்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். மேலும் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இருந்து ஓய்வில் இருந்த கே எல் ராகுல், வங்காளதேச அணிக்கு எதிரான தொடரில் களமிறங்கவும் உள்ளார்.
அப்படி ஒரு சூழலில் தற்போது கே எல் ராகுல் திருமணம் தொடர்பாக வெளியாகி உள்ள தகவல் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.
இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேனான கே எல் ராகுல், பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகளும் நடிகையான அதியா ஷெட்டியை காதலித்து வருவது ஏற்கனவே தெரிந்த விஷயம் தான். கடந்த மூன்று ஆண்டுகளாக இருவரும் பல இடங்களில் சுற்றித் திரிந்து வரும் நிலையில் இவர்களின் திருமணம் குறித்த விஷயம் கூட டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பாக அதிகம் பரவலாக இருந்து வந்தது. தனது மகள் மற்றும் கே எல் ராகுல் ஆகியோரின் திருமணம் விரைவில் நடைபெறலாம் என சுனில் ஷெட்டியும் அறிவித்திருந்தார்.
அப்படி ஒரு சூழலில் தான் தற்போது கே எல் ராகுல் திருமணம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. வங்காளதேச தொடருக்கு பிறகு, அதாவது ஜனவரி மாதம் கே.எல் ராகுல், பிசிசிஐயிடம் விடுமுறை கோரி உள்ளதாகவும் இதற்கு அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது .
ஒரு பக்கம் சுனில் செட்டி தனது மகளின் திருமணம் விரைவில் நடைபெறும் என தெரிவித்துள்ள நிலையில் தற்போது கே எல் ராகுல் பிசிசிஐயிடம் ஜனவரி மாதம் விடுமுறை கேட்டு கோரிக்கை வைத்து ஒப்புதலும் பெற்றுள்ளது தொடர்பான தகவலும் வெளியாகி உள்ளதால் விரைவில் கே எல் ராகுல் மற்றும் அதியா ஷெட்டி திருமணம் குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
