'ரொம்ப தொல்ல கொடுக்குறானே'...'பெற்ற மகனையே தீர்த்து கட்டிய தாய்'...வெளிவந்த அதிர்ச்சி உண்மை!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Jeno | Apr 08, 2019 04:06 PM

பெற்ற மகனையே கொலை செய்துவிட்டு அதனை மறைத்த தாயின் செயல் 18 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Hyderabad police solve 18-year-old murder case

ஐதரபாத்தின் சைபராபாத் பகுதியை சேர்ந்தவர் மசூதா பீ .இவரின் மகன் முகமது காஜா.இவர் போதை பொருள், சூதாட்டம் என பல கெட்டப்பழக்கங்களுக்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.தனது செலவிற்கு தாயிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.இதனால் தாய்க்கும் மகனிற்கும் அவ்வப்போது பிரச்னை நடந்து வந்துள்ளது.

மகனிடம் எவ்வளவோ எடுத்து கூறியும் தொடர்ந்து பிரச்னை செய்துள்ளார்.இதனால் மகனின் கொடுமை தாங்க முடியாமல் அவனை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.இதனையடுத்து மருமகன்கள் ரஷீத், பஷீர் மற்றும் ஆட்டோ டிரைவர் ஹாஷம் ஆகியோர் உதவியுடன்,கடந்த 2001ம் ஆண்டு, ஜூன் 5ம் தேதி காஜாவை 'கள்' அருந்த போகலாம் என அழைத்து சென்று கொலை செய்துள்ளனர். பின்பு யாருக்கும் தெரியாமல் கொலையினை மறைத்துள்ளனர்.

இதனிடையே இந்த கொலை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், 18 ஆண்டுகளுக்கு பின்பு இந்த வழக்கில் துப்பு துலக்கியுள்ளனர்.இதனையடுத்து கொலைக்கு உதவியாக இருந்த தாய் மசூதாவின் மருமகன்கள் ரஷீத், பஷீர் மற்றும் ஆட்டோ டிரைவர் ஹாஷம் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.மேலும் தலைமறைவாக இருக்கும் முக்கிய குற்றவாளியும்,கொலை செய்யப்பட்டவரின் தாயுமான மசூதாவை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

துப்பு கிடைக்காமல் 18 வருடங்களாக விசாரணையில் இருந்த வழக்கில்,தற்போது துப்புதுலக்கப்பட்டு குற்றவாளிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளது,ஐதரபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #MURDER #HYDERABAD POLICE #MOTHER