'உயிருக்கு உயிரா காதலிச்சேன்'...ஆனா?...'காதலியை எரித்த'...'காதலனின் அதிரவைக்கும் வாக்குமூலம்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Apr 05, 2019 12:56 PM

மூன்று வருடங்களாக காதலித்த காதலியை,காதலனே எரித்து கொன்ற சம்பவம்,கேரளாவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Thrissur college girl set on fire at her house

கேரளாவின் திருச்சூர் பகுதியை சேர்ந்தவர்  நீது.22 வயதான  நீது,கொடக்காராவில் உள்ள அக்சிஸ் பொறியியல் கல்லூரியில் பி.டெக் படித்துவந்தார்.இவரின் தாய் சில வருடங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். அதன் பிறகு அவரது தந்தையும் மகளை விட்டுவிட்டு எங்கேயோ சென்று விட்டார். இதனால் பாட்டி மற்றும் மாமாவுடன் நீது வசித்து வந்தார்.

இந்நிலையில் நீதுவும்,நிதிஷ் என்ற வாலிபரும் கடந்த 3 வருடங்களாக தீவிரமாக காதலித்து வந்துள்ளனர்.எம்.பி.ஏ பட்டதாரியான நிதிஷ்,கொச்சியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.இவர்களின் காதல் இரு வீட்டாருக்கும் தெரியும்.எனவே படிப்பை முடித்து விட்டு தான் திருமணம் செய்துகொள்வேன் என  நீது உறுதியாக கூறிவிட்டார்.ஆனால் நிதிஷ் தொடர்ந்து திருமணத்திற்கு வற்புறுத்தி வந்துள்ளார்.இதனால் இவர்கள் இருவருக்கும் அவ்வப்போது பிரச்னை இருந்து வந்துள்ளது.

இதனிடையே நேற்று அதிகாலை நீதுவின் வீட்டிலிருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் பதறி போன அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர்.அப்போது  வீட்டுக்கு வெளியே ஒரு பைக் நின்றது. வீட்டுக்குள் சென்று பார்த்தபோது குளியலறையில் தீ காயங்களுடன் விழுந்து கிடந்தார் நீது.அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அப்போது நீதுவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் நீதுவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் சம்பவம் நடந்த போது நீதுவின் வீட்டிற்கு வந்தது  நிதிஷ் என்பது விசாரணையில் உறுதியானது. இதனையடுத்து  நிதிஷை கைது செய்த காவல்துறையினர்,அவரிடம் விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது அவர் அளித்த வாக்குமூலம் காவல்துறையினரை அதிர்ச்சியடைய செய்தது.

சம்பவம் நடந்த அன்று நிதிஷ்,நீதுவின் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அப்போது திருமணம் தொடர்பாக இருவருக்குள்ளும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.மேலும்,நீது வேறு ஒரு ஆண் நண்பருடன் பழகி வந்துள்ளார்.இதை அறிந்த நிதிஸ் கடுமையான கோபத்தில் இருந்துள்ளார்.இது தொடர்பான  வாக்குவாதம் முற்றிய நிலையில்,அங்கிருந்த கத்தியால் நீதுவை சரமாரியாகக் குத்திவிட்டு,அவரை தீ வைத்து எரித்துள்ளார்.அதன் பின்பு அங்கிருந்து சென்ற நிதிஷை தற்போது காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த மாதம் திருவல்லா நகரில் கல்லூரி மாணவி ஒருவர் காதலனால் கொல்லப்பட்ட சம்பவம் நடந்த நிலையில்,அதே போன்று தற்போது நடந்திருக்கும் சம்பவம் கேரளாவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #MURDER #KERALA #SPURNED LOVE #NEETHU #NITHEESH