IPL 2020: 'கோடிக்கணக்குல' கொட்டிக் குடுத்தும்.. வேலைக்கு ஆகல.. பேசாம இந்த '5 பேரை' தூக்கிரலாமா?
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Manjula | Oct 18, 2019 07:17 PM
ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஐபிஎல் ஏலத்தில் கடந்த வருடம் தங்கள் டீமில் சரியாக விளையாடாத வீரர்களை கழட்டிவிடுவதற்கு அணிகள் துடியாய் துடிக்கும். அந்த வகையில் இந்த ஆண்டும் ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் சரியாக விளையாடாத வீரர்களை கழட்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தவகையில் இந்த ஆண்டு ஒவ்வொரு டீமில் இருந்தும் எந்த வீரர்கள் கழட்டி விடப்படலாம், யாருக்கு இதில் அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்பதை இங்கே பார்க்கலாம்.
சென்னை சூப்பர் கிங்ஸ்
ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆதரவை பெற்று இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனி இருந்து வருகிறார். கடந்த வருடம் சென்னைஅணியால் ஏலத்தில் எடுக்கப்பட்ட மோஹித் சர்மா போன சீசன் முழுவதுமே சொதப்பினார். அதிக விலைக்கு எடுக்கப்பட்டு, விளையாடும் அணியில் வாய்ப்பும் அவருக்கு அளிக்கப்பட்டது. ஆனால் மோஹித் எதிர்பார்த்த விக்கெட்டுகள் எடுக்காமல் சொதப்பி விட்டார். இதனால் இந்த வருடம் சென்னை அணி அவரை விடுவித்தாலும் ஆச்சரியமில்லை.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
கடந்த வருடம் பெங்களூரு அணியால் 5 கோடிக்கு எடுக்கப்பட்ட சிவம் துபே மொத்தமாக 40 ரன்கள் மட்டுமே எடுத்தார். எதிர்பார்த்த அளவில் அவரது ஆட்டம் இல்லை என்பதால் இந்த முறை அவரை பெங்களூர் அணி விடுவிக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
கடந்த வருடம் ரூபாய் 5 கோடி கொடுத்து கார்லஸ் பிராத்வெயிட்டை கொல்கத்தா அணி எடுத்தது. ஆனால் பேட்டிங், பவுலிங் உள்ளிட்ட எதிலும் இவர் ஜொலிக்கவில்லை. இதனால் இந்த வருடம் இவரை ஏலத்தில் விடுவதற்கு கொல்கத்தா அணி கொஞ்சமும் தயங்காது.
ராஜஸ்தான் ராயல்ஸ்
கடந்த வருடம் ராஜஸ்தான் அணியால் 50 லட்சம் கொடுத்து வாங்கப்பட்ட ஆஷ்டன் டர்னர் 3 போட்டிகளில் டக் அவுட் ஆகி புதிய சாதனை படைத்தார். இதனால் இவரை விடுவித்து விட்டு வேறு ஒரு வீரரை ராஜஸ்தான் அணி ஏலத்தில் எடுக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.
டெல்லி கேபிடல்ஸ்
பெயரை மாற்றிய ராசியோ என்னவோ முதல் 4 இடங்களுக்குள் வந்து ரசிகர்களை டெல்லி அணி உற்சாகத்தில் ஆழ்த்தியது. கடந்த ஆண்டு இந்த அணியால் 6.4 கோடிகள் கொடுத்து எடுக்கப்பட்ட காலின் இங்ரம் 12 இன்னிங்ஸ்கள் விளையாடி 184 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் இந்த ஆண்டு இவர் அணியில் இருந்து கழற்றி விடப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.