‘அதேதான்’.. ‘இததான் நாங்களும் எதிர்பாத்தோம்’ ஜடேஜா மாதிரி செஞ்ச கோலி..! வைரல் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Oct 21, 2019 01:04 PM
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா அரைசதம் அடித்து அசத்தினார்.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி ராஞ்சி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 497 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா 212 ரன்களும், ரஹானே 115 ரன்களும் எடுத்து அசத்தினர். தென் ஆப்பிரிக்க அணியை பொருத்த வரை வேகப்பந்து வீச்சாளர் ரபாடா 3 விக்கெட்டுகளும், ஜார்ஜ் லிண்டே 4 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
இப்போட்டியில் இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஜடேஜா 119 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து அசத்தினார். அதனை கொண்டாடும் விதமாக பேட்டை கத்திசண்டையைப்போல சுழற்றினார். அப்போது ட்ரெஸ்ஸிங் ரூம்மில் இருந்த கேப்டன் விராட் கோலியும் நகைச்சுவையாக ஜடேஜா போல செய்தார். இந்நிலையில் தற்போது பேட்டிங் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணி 130 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.
— Mohit Das (@MohitDa29983755) October 20, 2019
