அந்த '3 பேரை' எடுக்குறோம்.. 'கப்ப' தட்டித் தூக்குறோம்.. சிஎஸ்கே-வின் 'மாஸ்டர்' பிளான்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Oct 17, 2019 06:56 PM

அடுத்த வருட ஐபிஎல் போட்டிகள் நடப்பதற்கு இன்னும் 6-7 மாதங்கள் இருந்தாலும் அதுகுறித்து ஒவ்வொரு நாளும் சில சுவாரஸ்யமான செய்திகள் வந்துகொண்டு தான் இருக்கின்றன. ஒவ்வொரு அணியும் தங்களிடம் இருக்கும் வீரர்களை அணி மாற்றுவது, புதிய பயிற்சியாளர்களை எடுப்பது என படு பிசியாக உள்ளன. அந்தவகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 வீரர்களை எடுக்க பிளான் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

IPL 2020: 3 players CSK could target in the auction

கணேசன் பெரியசாமி

டிஎன்பிஎல் போட்டிகளில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்காக விளையாடி வருபவர் கணேசன் பெரியசாமி(25). இறுதிப்போட்டியில் தனது அணிக்காக 5 விக்கெட்டுகள் எடுத்து தன்னுடைய திறமையை நிரூபித்தார். ஒன்பது இன்னிங்ஸில் 21 விக்கெட்டுகள் வீழ்த்தி 10.48 சராசரி வைத்திருக்கிறார். இதனால் மோஹித் சர்மாவை விடுவித்து இவரை அணியில் எடுக்க வாய்ப்புகள் அதிகம். 5 கோடிகள் கொடுத்து மோஹித்தை சென்னை அணி எடுத்தது. ஆனால் கடந்த சீசனில் மோஹித் அதிக ரன்கள் வீட்டுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிளென் மேக்ஸ்வெல்

ஆஸ்திரேலிய அணியை சார்ந்த கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல் உலகக்கோப்பை போட்டிக்காக கடந்த ஐபிஎல் ஏலத்தில் இருந்து ஒதுங்கி இருந்தார். இதனால் இந்த ஐபிஎல் ஏலத்தில் மேக்ஸ்வெல்லுக்கு கடும் போட்டி நிலவலாம். 7.8 கோடிகள் கொடுத்து கேதார் ஜாதவ்வை சிஎஸ்கே அணி எடுத்தது. ஆனால் அதற்கு ஏற்றவாறு அவர் விளையாடவில்லை. மேக்ஸ்வெல்லை சிஎஸ்கே எடுக்கும் பட்சத்தில் தோனியும், மேக்ஸ்வெல்லும் இணைந்து கடைசிக்கட்ட பிரஷரை எதிர்கொண்டு விளையாடினால் கப் நமக்குத்தான். மேக்ஸ்வெல் ஒரு ஆல்ரவுண்டர் என்பது மேலும் ஒரு பிளஸ் பாயிண்டாக இருக்கும்.

ஜேசன் ராய்

இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜேசன் ராய் கடந்த ஐபிஎல் ஏலத்தில் பங்கு பெறவில்லை. இந்த ஐபிஎல் ஏலத்தில் அவர் பங்கு பெரும் பட்சத்தில் அவருக்கான போட்டி கடுமையாக இருக்கும். இந்த முறை சிஎஸ்கே அவரை எடுக்கும் பட்சத்தில் பொறுப்பாக விளையாடி கப்பை வென்று கொடுப்பார் என்று நம்பலாம். இங்கிலாந்து அணி உலகக்கோப்பை வெல்வதற்கு ஜேசன் ராய் ஒரு முக்கிய காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அணியில் இருக்கும் சாம் பில்லிங்ஸை விடுவித்து ஜேசன் ராயை அணி எடுக்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.