'யோகா, மசாஜ் மட்டும் போதும்'... 'ஃபிட்னஸ் ரகசியம் சொல்லும்'... 'பிரபல அதிரடி வீரர்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | May 16, 2019 11:13 AM

தன்னுடைய உடல் தகுதி குறித்து சுவாராஸ்யமான தகவல்களை கூறியுள்ளார், 5-வது முறையாக உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள கிறிஸ் கெய்ல்.

west indies chris gayle chooses yoga over gym

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல். 39 வயதான இவர், ஐந்தாவது முறையாக உலகக் கோப்பை தொடரில் களமிறங்க உள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்தப்பேட்டியில், 'இது ஒரு நகைச்சுவையான விளையாட்டு. உலகக் கோப்பை தொடரில் நிச்சயம் அதிக ரன்களை குவிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது. நிறைய அனுபவம் உள்ளது. எப்போதும் மனதை தயாராக வைத்திருப்பதுதான் முக்கியமானது.

என்னுடைய அனுபவத்தையும், மனோபலத்தையும் பயன்படுத்துகிறேன். சில நேரங்களில்  ஜிம்முக்கு சென்று பயிற்சி எடுப்பதில்லை. அதிக நேரம் ஓய்வு எடுத்துக்கொள்வேன். அதிக அளவில் யோகா மற்றும் மசாஜ் செய்து கொள்வேன். நீண்ட நாள்களுக்குப் பிறகு விளையாடும்போது தடையை ஏற்படுத்தாமல் இருக்க, இது உதவி புரிகிறது. போட்டிக்கு முன்பாக உடலையும், மனதையும் புத்துணர்ச்சி உடன் வைத்துக்கொள்ள ஸ்ட்ரச்சிங் (stretching)செய்வேன்.

அது எனக்கு விளையாடும்போது புத்துணர்ச்சியைத் தரும். ஆடுகளத்தில் என்ன தேவை என்பது எனக்கு தெரியும். நேர்மையாக சொல்ல வேண்டுமெனில் ரசிகர்களுக்காக நான் விளையாடுகிறேன். ஓய்வு பெற்றுவிடலாம் என்று நினைத்தாலும், ரசிகர்கள் என்னை விடுவதில்லை' என்று கிறிஸ் கெய்ல் கூறியுள்ளார்.

Tags : #FITNESS #WESTINDIES