7 வருட 'மணவாழ்க்கை' முடிவுக்கு வந்தது... '192 கோடி' ரூபாய் விட்டுக்கொடுத்து... மனைவியை 'பிரிந்த' முன்னாள் கேப்டன்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும், மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவருமான மைக்கேல் கிளார்க் தன்னுடைய மனைவி கைலியை சட்டப்படி விவாகரத்து செய்துள்ளார். கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட கிளார்க்குக்கு கெல்சி லீ என்ற 4 வயதுடைய மகள் இருக்கிறார்.

சுமார் 5 மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்த நிலையில் நேற்று பரஸ்பர அடிப்படையில் பிரிந்து விட்டதாக அறிவித்தனர். இதற்காக கிளார்க் சுமார் 192 கோடி ரூபாய் மனைவிக்கு கொடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர்கள், ''சிறிது காலம் சேர்ந்து வாழ்ந்த பின் நாங்கள் இருவரும் பிரிந்து செல்வதாக முடிவெடுத்து இருக்கிறோம். இது மிகவும் கடினமான ஒன்று தான்,'' என தெரிவித்து இருக்கின்றனர்.
Tags : #CRICKET
