ப்பா...! புழுதி பறக்க அடிச்ச ஒரே 'ஷாட்' தான்...! அப்படியே வளைஞ்சுப் போய் விழுந்த 'ஜீரோ டிகிரி' கார்னர் கோல்...! சிலிர்க்க வைக்கும் வைரல் வீடியோ...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில், பள்ளி படிக்கும் மாணவர் ஒருவர் கால்பந்தாட்டப் போட்டியில் அடித்த 'ஜீரோ டிகிரி’ கார்னர் கோல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் விளக்கக்காட்சி பள்ளியின் ஐந்தாம் வகுப்பில் படித்து வருபவர் பி.கே.டானி (10). இவர், தற்போது கேரள கால்பந்து பயிற்சி மைய கிளப்பில் விளையாடி பயிற்சி பெற்று வருகிறார்.
இவர் வயநாடு மாவட்டத்தின் மீனங்காடியில் நடைபெற்ற ஆல் கேரள கிட்ஸ் கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்தார். அவர் அந்த போட்டியின் சிறந்த ஆட்டக்காரர் என்ற விருதும் பெற்றார். இப்போட்டியின் போது இவர் அடித்த ‘ஜீரோ டிகிரி’ கார்னர் கோல் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை முன்னாள் இந்திய கால்பந்து கேப்டன் மணி விஜயனும் டிவிட்டரில் பாராட்டி ட்விட் செய்துள்ளார். இதனால், உலகம் முழுவதும் பி.கே.டானி பாராட்டப்பட்டு வருகிறார்.
இதுகுறித்து டானியின் தந்தை அபு ஹாஷிம் கூறுைகயில், “கால்பந்து டானிக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. அவர் அதை மிகவும் நேசிக்கிறார். அதனால் தான் சிறப்பாக விளையாட முடிகிறது. எதிர்காலத்தில் பெரிய ஆட்டக்காரராக வருவார் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும், அடுத்த ஆண்டு தனது பள்ளி விடுமுறையில் அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த புகழ்பெற்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியை சந்திக்க ஸ்பெயினுக்கு செல்ல டானி விரும்புகிறார்’’ என்றார்.
Superb ..മോനെ... pic.twitter.com/EEXrlUPOWD
— I M Vijayan (@IMVijayan1) February 11, 2020
