'அப்போ களத்துல சந்திப்போம்' ... 'மும்பை'யை சந்திக்க போகும் 'சிஎஸ்கே' ...உற்சாகத்தில் ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Jeno | May 10, 2019 11:25 PM
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இடையே நடைபெற்ற 2வது தகுதிச்சுற்று போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது. டாஸ் வென்ற சென்னை அணி பௌலிங்கை தேர்ந்தெடுத்தது. இன்றைய போட்டியில் வெற்றி பெரும் அணியே இறுதி போட்டிக்கு செல்லும் என்பதால்,இரு அணிகளுக்கும் முக்கியமான போட்டியாக கருதப்பட்டது.
இதனிடையே முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியின் வீரர்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார்கள்.தொடக்க வீரர் பிரித்வி ஷா 5 ரன்னில் சாஹர் பந்துவீச்சில் தனது விக்கெட்யை பறிகொடுக்க, சிறிது நேரம் களத்தில் நின்ற ஷிகர் தவான் 18 ரன்னில் நடையை கட்டினார்.இதையடுத்து முன்ரோ,கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் என விக்கெட்கள் சீட்டு கட்டை போன்று சரிந்தது.இதனிடையே ஒரு புறம் விக்கெட்கள் சரிந்த போதும் மறுபுறம் ரிஷப் பண்ட் மட்டும் சற்று அதிரடியாக ஆடினார்.இறுதியில் ரிஷப் பண்ட்டும் 38 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
இந்நிலையில் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. சாஹர், ஹர்பஜன் சிங், ஜடேஜா, பிராவோ தலா இரண்டு விக்கெட்களை சாய்த்தனர். இம்ரான் தாஹிர் ஒரு விக்கெட் எடுத்தார்.இதையடுத்து தொடக்க வீரர்களாக களமிறங்கிய சென்னை வீரர்கள் டுப்ளஸிஸ் மற்றும் வாட்சன் இருவரும் அரை சதம் அடிக்க சென்னை அணியின் வெற்றி ஏறக்குறைய உறுதியானது.
இதையடுத்து களமிறங்கிய ரெய்னா(11)மற்றும் ராயுடு (20) ரன்னில் ஆட்டமிழந்தனர். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் தோனி,வின்னிங் ஷாட்டை அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 9 ரனில் எதிர்பாராத விதமாக அவுட் ஆனார். இதையடுத்து களமிறங்கிய ப்ராவோ வின்னிங் ஷாட்டை அடிக்க,சென்னை அணி வெற்றி பெற்றது.இதனிடையே நாளை மறுநாள் நடைபெறும் இறுதி போட்டியில் சென்னை அணி மும்பையை எதிர்கொள்கிறது.