'ஜிவா' கிரவுண்ட்டுக்கு வந்தா போதும்'...'சின்ராச' கையிலேயே புடிக்க முடியாது'...வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Jeno | May 11, 2019 11:27 AM

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இடையே நடைபெற்ற  2வது தகுதிச்சுற்று போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது. போட்டிக்கு பின்பு,தல தோனியின் மகள் மற்றும் சின்ன தல ரெய்னாவின் மகள் செய்த சேட்டைகள் தற்போது வைரலாகி வருகிறது.

Ziva kisses MS Dhoni after CSK beat Delhi Capitals video goes viral

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பௌலிங்கை தேர்ந்தெடுத்தது. இதையடுத்து டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது.இதனை தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு,தனது இலக்கை எட்டி வெற்றி வாகை சூடியது.நாளை நடைபெறும் இறுதி போட்டியில் மும்பை அணியை சென்னை எதிர்கொள்ள இருக்கிறது.

இந்நிலையில் போட்டி முடிந்த பின்பு மைதானத்திற்குள் வந்த தோனியின் மகள் மற்றும் ரெய்னாவின் மகள் மைதானத்தில் செய்த சேட்டைகள் தற்போது வைரலாகி வருகிறது.அதோடு ஜிவா,தோனிக்கு கொடுத்த முத்தம் சமூகவலைத்தளங்களில் அனைவரது ஹெர்ட்ஸையும் அள்ளியுள்ளது.

Tags : #IPL2019 #IPL #CSK #CHENNAI-SUPER-KINGS #MSDHONI #DELHI CAPITALS #ZIVA DHONI