‘கிரிக்கெட்டுக்கு ஒரு சகாப்தம்’.. சிஎஸ்கேவுக்கு மட்டும் அவரு ‘தல’ இல்ல... தோனியை தாறுமாறாக புகழ் தள்ளிய பிரபல வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | May 12, 2019 07:36 PM

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியை, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் புகழ்ந்து கூறியுள்ளார்.

MS Dhoni an era of cricket, not just a player, says Matthew Hayden

ஐபிஎல் டி20 தொடரின் 12 -வது சீசனின் இறுதிப்போட்டி இன்று(12.05.2019) ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. இதில் நடப்பு சேம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்டை நடத்துகின்றன. ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மூன்று முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது. இதனால் இன்றைய போட்டியில் எந்த அணி கோப்பையை கைப்பற்ற போகிறது என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தோனியை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில்,“தோனி ஒரு கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல, அவர் கிரிக்கெட்டின் சகாப்தம். தோனி நம்ம ஏரியா கிரிக்கெட் வீரர் போல உள்ளவர். அவரால் எவற்றையும் செய்ய முடியும். அதனால்தான் அவர் ‘தல’தோனி. சென்னை அணிக்கு மட்டுமல்ல கிரிக்கெட் உலகிற்கே அவர் ‘தல’- ஆகதான் தெரிகிறார்” என மேத்யூ ஹெடன் புகழ்ந்து தள்ளியுள்ளார். இவர் சென்னை அணியின் முன்னாள் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து இன்றைய இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

Tags : #IPL #IPL2019 #MSDHONI #WHISTLEPODU #YELLOVE #CSKVMI