'டெல்லிக்கு ஒரு நாளும்,அடி பணிய மாட்டோம்'... இவர் எத சொல்றாரு ?...பிரபல இயக்குனரின் ட்வீட்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Jeno | May 11, 2019 12:03 AM
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இடையே நடைபெற்ற 2வது தகுதிச்சுற்று போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது. டாஸ் வென்ற சென்னை அணி பௌலிங்கை தேர்ந்தெடுத்தது. இன்றைய போட்டியில் வெற்றி பெரும் அணியே இறுதி போட்டிக்கு செல்லும் என்பதால்,இரு அணிகளுக்கும் முக்கியமான போட்டியாக கருதப்பட்டது.

இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது.சாஹர், ஹர்பஜன் சிங், ஜடேஜா, பிராவோ தலா இரண்டு விக்கெட்களை சாய்த்தனர்.இதையடுத்து களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்கள்,டுப்ளஸிஸ் மற்றும் வாட்சன் இருவரும் அரை சதம் அடிக்க சென்னை அணி 4 விக்கெட்களை இழந்து எளிதான வெற்றியை பெற்றது.
இதனைத் தொடர்ந்து ட்விட்டரில் ரசிகர்கள் சென்னை அணியின் வெற்றியை கொண்டாடி வருகிறார்கள்.அந்த வகையில் தமிழ் பட இயக்குனர் அமுதன் பதிவிட்ட ட்விட் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.அதில் 'டெல்லிக்கு ஒரு நாளும்,அடி பணிய மாட்டோம்' என பதிவிட்டுள்ளார்.இதில் அவர் உண்மையிலேயே டெல்லி அணியை தான் குறிப்பிடுகிறாரா? என பலரும் நகைச்சுவையாக பதிவிட்டு வருகிறார்கள்.
டெல்லிக்கு ஒரு நாளும் அடி பணிய மாட்டோம்.
— CS Amudhan (@csamudhan) May 10, 2019
