'சியர் அப்' பண்ண நாங்க இருக்கோம்' ... 'கமான் 'சிஎஸ்கே' கமான்'... தெறிக்க விடும் 'ஜுனியர்ஸ்' !

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Jeno | May 10, 2019 09:08 PM

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இடையே இன்று 2வது தகுதிச்சுற்று போட்டி விசாகப்பட்டினத்தில் தொடங்கியுள்ளது.டாஸ் வென்ற சென்னை அணி பௌலிங்கை தேர்ந்தெடுத்துள்ளது.

CSK vs DC match Ziva Dhoni photo going viral in Twitter

இன்றைய போட்டியில் வெற்றி பெரும் அணியே இறுதி போட்டிக்கு செல்லும் என்பதால்,ரசிகர்களுக்கு இது பெரும் விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதிலும் குறிப்பாக சென்னை ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.இதனிடையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள புகைப்படம் ஒன்று,சென்னை ரசிகர்களின் ஹெர்டின்ஸை அள்ளியுள்ளது.

தல தோனியின் செல்ல மகள் ஜிவா,ரெய்னாவின் மகள் மற்றும் சில சுட்டிகளோடு அமர்ந்திருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.ரசிகர்கள் தோனியை எந்த அளவிற்கு கொண்டாடுகிறார்களோ அந்த அளவிற்கு அவரது மகளையும் அவரது சேட்டைகளையும் கொண்டாடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #IPL #IPL2019 #CSK #CHENNAI-SUPER-KINGS #MSDHONI #SURESHRAINA #ZIVA DHONI ##WHISTLEPODU ##YELLOVE ##CSKVDC