“தன் சாதுர்யத்தால் உயிர் தப்பிய நபர்”!.. ‘அந்த நபரை உரசியபடி சென்ற ரயில்’!.. பரபரப்பான சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Arunachalam | May 14, 2019 11:33 AM

மும்பையில் இளைஞர் ஒருவர் தண்டவாளத்தை கடக்கும் போது எக்ஸ்பிரஸ் ரயில் வந்ததால் தண்டவாளத்தின் குறுக்கே படுத்து உயிர் தப்பியுள்ளார்.

man lie down in the track while the train crossing him in Mumbai

மும்பை அந்தேரி ரயில் நிலையத்தில் இளைஞர் ஒருவர் தண்டவாளத்தை குறுக்கு வழியில் கடக்க முயன்றார். அப்போது அந்த தண்டவாளத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் வந்ததால் தண்டவாளத்தின் குறுக்கே படுத்து உயிர் தப்பினார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக அவந்திகா எக்ஸ்பிரஸ் ரயில் வந்துள்ளது. இதையடுத்து, அந்த இளைஞர் நடைமேடைக்கும் தண்டவாளத்திற்க்கும் நடுவே படுத்து கொண்டார். இந்நிலையில், அந்த இளைஞரை உரசியவாறு அவாந்திகா எக்ஸ்பிரஸ் ரயில் சென்றுள்ளது.

இதனையடுத்து, அந்த நபரை அங்கிருந்த மக்கள் தண்டவாளத்திலிருந்து கைபிடித்து மேலே தூக்கியுள்ளனர். இந்நிலையில் அந்த நபரின் சமயோஜித்த யோசனையால் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.

Tags : #MUMBAI #ANDHERI EXPRESS