11 வருஷத்துக்கு முன்னாடி ‘தல’தோனியை சிஎஸ்கே ஏலத்தில் எடுத்த விலை இவ்வளவா..! வெளியான அரிய தகவல்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | May 12, 2019 05:54 PM
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனியை ஏலத்தில் எவ்வளவு விலை கொடுத்து எடுத்தது என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் டி20 தொடரின் இறுதிப்போட்டி இன்று(12.05.2019) ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் இரு முக்கிய அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி கொள்கின்றன.
இதுவரை விளையாடிய ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் 3 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது. மேலும் இந்த சீசனின் ஒரு போட்டியிலும் சென்னை அணி மும்பையை வீழ்த்த முடியவில்லை. அதனால் இன்றைய இறுதிப்போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கடந்த 2008 -ம் ஆண்டு முதன்முதலாக ஐபிஎல் தொடரில் தோனியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எவ்வளவு விலை கொடுத்து ஏலத்தில் எடுத்தது என ஐபிஎல் வீரர்களை ஏலத்தில் விட்ட ரிச்சர்ட் மேட்லி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் தோனியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1.5 மில்லியன் டாலருக்கு(இந்திய மதிப்பில் சுமார் 10 கோடி) ஏலத்தில் எடுத்துள்ளது.
And the rest is #WhistlePodu 😄🦁💛 https://t.co/R5LXy71078
— Chennai Super Kings (@ChennaiIPL) May 12, 2019
