'ஒரு முடிவுக்கு வாங்க'... இது என்ன கிரிக்கெட்டா,இல்ல கபடியா ?... தெறிக்க விட்ட வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Jeno | May 11, 2019 01:03 PM

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில்,டெல்லி வீரர்காள் தவறவிட்ட ரன் அவுட் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Delhi Capitals missed the easiest of run out during CSK DC Qualifier 2

இறுதி கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணியும் டெல்லியும் மோதின.இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி பௌலிங்கை தேர்வு செய்தார்.இதையடுத்து களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்தது.எளிதாக அடிக்கக்கூடிய இலக்கு என்றாலும்,சென்னை ரசிகர்கள் சிறிது பதற்றத்தோடே இருந்தார்கள். இதையடுத்து வழக்கம் போல வாட்சன், டுபிளசி ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினார்கள்.

ஆட்டத்தின் முதல் ஓவரை பவுல்ட் வீசினார்.அப்போது அவரது இரண்டாவது பந்தை எதிர்கொண்ட டுபிளசி ஆப் சைடு தட்டிவிட்டு 1 ரன் எடுக்க ஓடினார். எதிர்முனையில் இருந்த வாட்சன் இதற்கு ஓடுவதா,வேண்டாமா என்ற குழப்பத்தில் ஓடிவர,அதற்குள் டுபிளசி ஆடுகளத்தின் பாதி தூரத்தை கடந்து விட்டார்.இதனை பயன்படுத்தி கொண்ட டெல்லி வீரர் அக்‌ஷர் படேல்,பந்தை பவுலர் முனைக்கு வீச,வாட்சன், டுபிளசி ஒரே பக்கமாக ஓடினர்.

பின் டுபிளசி சுதாரித்து பேட்ஸ்மேன் முனைக்கு திரும்பினார்.ஆனால் டெல்லி வீரர் முன்ரோ சரியாக த்ரோ செய்யாததால்,பந்து பவுண்டரியை நோக்கி சென்றது. இதன் பின் வாட்சன், டுபிளசி 1 ரன் ஓடினர்.இதனிடையே டுபிளசி, வாட்சன் ஆகியோர் சொதப்பலாக ஓடி,இரு முனையிலும் ரன் அவுட் வாய்ப்பு கிடைத்தும்,டெல்லி வீரர்கள் கோட்டை விட்டது டெல்லி ரசிகர்களை கடுமையாக கடுப்பேற்றியது.அதன் வீடியோ காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Tags : #IPL #IPL2019 #CSK #CHENNAI-SUPER-KINGS #DELHI CAPITALS #FAF DU PLESSIS #SHANE WATSON