‘ஓய்வு முடிவை அறிவித்தப் பின்’... ‘மீண்டும் அணிக்கு திரும்ப விரும்பும்’... ‘பிரபல இந்திய வீரர்’!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Aug 24, 2019 10:49 PM

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த பிரபல சிஎஸ்கே மற்றும் இந்திய வீரர், தனது மனதை தற்போது மாற்றிக் கொண்டுள்ளார். 

Ambati Rayudu on his international, IPL comeback

உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய கிரிக்கெட் அணிக்கு நம்பர்-4 வீரராக எந்த வீரர் களமிறங்குவது என்ற சிக்கல் இருந்தது. 2018-ல் அம்பதி ராயுடு நல்ல ஃபார்மில் இருந்ததால், அவர் பொருத்தமாக இருப்பார் எனக் கூறப்பட்டது. ஆனால், உலகக்கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் அவரது பெயர் இடபெறவில்லை. இதுதொடர்பான தனது அதிருப்தியை அப்போதே அவர் தெரிவித்திருந்தார். இருந்தாலும் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கொண்டிருந்தார்.

உலகக் கோப்பை போட்டியின்போது ஷிகர் தவான், விஜய் சங்கர் ஆகியோர் காயமடைந்தனர். இவர்களுக்குப் பதிலாக ரிஷப் பன்ட், மயங்க் அகர்வால் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர். இதில் அதிருப்தியடைந்த அம்பாதி ராயுடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ராயுடுவின் ஓய்வுக்கு இந்திய தேர்வுக்குழுவின் செயல்பாடுகள்தான் காரணம் என முன்னாள் வீரர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் ஒரு நாள் தொடரில் கலந்துக் கொள்ள தமிழ்நாடு வந்த அம்பதி ராயுடு செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘உலக கோப்பையில் கலந்துக் கொள்ள 4 ஆண்டுகளாக கடுமையாக  உழைத்தேன். அதில் தேர்வாகவில்லை என்ற ஏமாற்றத்தினாலேயே ஓய்வு பெறுவதாக முடிவெடுத்தேன். உணர்ச்சிவசப்பட்டு எடுத்த முடிவு இல்லை. மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த ஒன்று, கிடைக்கவில்லை. எனவே, அடுத்தகட்டம் நோக்கி நகர்வதுதான் சரி என நினைத்து அப்படி முடிவு எடுத்துவிட்டேன்.

இப்போது அதுபற்றி யோசிக்க நேரம் கிடைத்துள்ளது. இந்த முடிவு குறித்து பிசிசிஐக்கு கடிதம் எழுத உள்ளேன். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எனக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஐபிஎல் போட்டிகளுக்காகத் தயாராகி வருகிறேன். நான் கண்டிப்பாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவேன். கிரிக்கெட்டை முழுமையாக நேசிக்கிறேன். நாட்டுக்காக விளையாடும் வாய்ப்பு வந்தால் நிச்சயம் கலந்துக் கொள்வேன்’ என கூறினார்.

Tags : #CSK #IPL #AMBATIRAYUDU