‘புது இடம், புது டீம்’.. அடுத்த இன்னிங்ஸ்ஸிக்கு ரெடியான சிஎஸ்கே ப்ளேயர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Aug 27, 2019 12:48 PM

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய தென் ஆப்பிரிக்க வீரார் டு ப்ளிஸிஸ் புதிய அணியில் விளையாட ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

Faf Du Plessis signs with Kent for Remainder of Twenty20 Blast

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரரான டு ப்ளிஸிஸ் கடந்த 2012 -ம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார். சென்னை அணிக்கு இரண்டு வருட தடை விதிக்கப்பட்டபோது தோனியின் தலைமையிலான புனே அணியில் விளையாடியுள்ளார். சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் இங்கிலாந்தில் நடைபெற உள்ள டி20 ப்ளாஸ்ட் தொடரில் டு ப்ளிஸிஸ் விளையாட உள்ளார். இந்த தொடரில் கென்ட் அணியின் சார்பாக விளையாட இவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நடந்து முடிந்த உலகக்கோப்பைத் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த தொடரில் டி20 அணிக்கான கேப்டன் பதவியில் இருந்து டு ப்ளிஸிஸ் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : #CSK #FAFDUPLESSIS #TWENTY20BLAST #CRICKET