'ஆர்சிபி அணியில் அதிரடி மாற்றங்கள்'... 'பயிற்சியாளர்கள் திடீர் நீக்கம்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Aug 23, 2019 10:32 PM

அடுத்த வருட ஐபிஎல் போட்டியில் கோப்பையை வெல்லும் முனைப்புடன், ராயல்  சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

RCB appoints Mike Hesson as Director of Cricket Operations

ஆர்சிபி, டெல்லி கேபிடள்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய 3 அணிகளும் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. இந்த மூன்று அணிகளும் ஒவ்வொரு சீசனிலும் முதன்முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கி தோல்வியை தழுவுகின்றன. ஆர்சிபி அணிக்கு உத்வேகமளித்து புது உற்சாகத்துடன் கடந்த சீசனை அணுகும் விதமாக, தலைமை பயிற்சியாளராக இருந்த வெட்டோரி நீக்கப்பட்டு, கேரி கிறிஸ்டன் நியமிக்கப்பட்டார். ஆனால் கடந்த சீசனிலும் ஆர்சிபி அணி லீக் சுற்றுடன் வெளியேறியது.

இந்நிலையில், ஆர்சிபி அணியின் தலைமை பயிற்சியாளர் கிறிஸ்டன் மற்றும் பவுலிங் பயிற்சியாளர் ஆஷிஸ் நெஹ்ரா ஆகிய இருவரும் அதிரடியாக நீக்கப்பட்டு புதிய பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஆர்சிபி நிர்வாகம். கேகேஆர் அணியின் உதவி பயிற்சியாளர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்ட சைமன் கேடிச், ஆர்சிபி அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அணியின் இயக்குநராக மைக் ஹெசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரும் முன்னாள் பயிற்சியாளருமான மைக் ஹெசன், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தார். இந்த மாற்றங்கள் தொடர்பாக ஆர்சிபி சேர்மன் சஞ்சய் சுரிவாலா கூறும்போது, ‘ஒரே பயிற்சியாளர் என்ற முறைக்குத் திரும்பினால் உயர்ந்தபட்ச ஆட்டத்திறன் என்ற பலன் கிடைக்கும் என்றார். மேலும் மைக் ஹெஸன், சைமன் கேடிச்சின் அனுபவம் வெற்றிப் பண்பாட்டை ஆர்சிபி அணிக்குள் வளர்த்தெடுக்கும்’ என்று நம்பிக்கை தெரிவித்தார்.