‘இவருக்குள்ள இப்படி ஒரு திறமையா..?’ ‘பிரபல இந்திய வீரர் பதிவிட்டுள்ள’.. ‘மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ’..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Sep 03, 2019 11:16 PM

கிரிக்கெட்டைத் தாண்டி தனக்குள் இருக்கும் இசை திறமையை ஷிகர் தவான் வீடியோவாக பதிவிட்டுள்ளார்.

Shikhar Dhawan plays flute mesmerises fans with music Viral Video

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புல்லாங்குழல் இசைக்கும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். ஒரு கைதேர்ந்த இசை கலைஞரை போல ஷிகர் தவான் புல்லாங்குழல் இசைக்கும் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்தப் பதிவில் தவான், “ஒரு புதிய தொடக்கம். மரங்கள், காற்று மற்றும் கடலுடன் கொஞ்சம் இசை” என அந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். ஷிகர் தவான் கடந்த 4 ஆண்டுகளாக புல்லாங்குழல் வாசிக்க பயிற்சி எடுத்து வந்துள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு ட்விட்டரில், “எனக்கு மிகவும் பிடித்தமான இசைக்கருவியான புல்லாங்குழல் இசைக்க பயிற்சி எடுத்து வருகிறேன்” என அவருடைய குரு வேணுகோபாலுடன் வாசிக்க கற்றுக்கொள்ளும் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A fresh start.. Trees, the wind, the ocean & some music = bliss. 🎶

A post shared by Shikhar Dhawan (@shikhardofficial) on

 

 

 

Tags : #TEAMINDIA #SHIKHARDHAWAN #MUSIC #FLUTE #MESMERISING #VIDEO #VIRAL