'இத ஒரு ட்ரெண்டாவே வெச்சிருக்காய்ங்க'.. 'அப்பதானே உங்க புக் போனி ஆகும்?'.. வீரரை வெச்சு செஞ்ச பெய்ன்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Siva Sankar | Nov 18, 2019 03:03 PM
உலகக்கோப்பை இறுதிப் போட்டியில், வின்னிங் செய்த இன்னிங்ஸில் ஆடி, இங்கிலாந்து அணி கோப்பையை வெல்வதற்கு காரணமாக இருந்தவர்களுள் முக்கியமானவர் பென் ஸ்டோக்ஸ்.
அதன் பின்னர் ஆஷஸ் தொடரில், குறிப்பாக லீட்ஸ் மைதானத்தில் விளையாண்டபோது, அந்த இன்னிங்ஸையே டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றின் தலைசிறந்த இன்னிங்ஸாக அதை மாற்றினார். உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆடிய இன்னிங்ஸையே மிஞ்சிய ஆட்டமாகவும் அது அமைந்திருந்தது. இப்படி பல வெற்றிகளை, தான் குவித்ததற்கு முக்கியமான காரணங்களுள் வார்னர் தன்னை ஸ்லெட்ஜ் செய்ததும் குறிப்பிடத்தக்கது என்று பென் ஸ்டோக்ஸ் தன்னுடைய புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.
மேலும் வார்னர் தன்னை கிண்டலடித்து பேசியதுதான், ஆஷஸ் தொடரில் சிறப்பாக ஆடுவதற்கான உத்வேகத்தைக் கொடுத்ததாகவும் பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார். இந்த கருத்து பரவலாக பேசப்பட்டு வரும் சூழலில், ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெய்ன், வார்னர் அவ்வாறு ஸ்லெட்ஜ் செய்யவும் இல்லை, ஸ்டோக்ஸை தரக்குறைவாக பேசவும் இல்லை என்றும் அந்தத் தொடர் முழுவதும், தான் வார்னரின் அருகிலேயே இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ‘வார்னரின் பெயரை எல்லாவற்றுக்கும் இழுத்து, அவரை டேமேஜ் செய்வது இப்போதெல்லாம் இங்கிலாந்தில் டிரெண்டாகவே உள்ளது. இதன் மூலம் அவர்களது புத்தகத்தை விற்கும் உத்திதான் இது, புத்தகம் விற்க வாழ்த்துக்கள்’ என்று டிம் பெய்ன் கூறியுள்ளார். பந்தை சேதப்படுத்தியதால் வார்னருக்கு இருந்த தடைக்காலம் முடிந்து அவர் தற்போதெல்லாம் களத்தில் மாறுபட்ட தன்மையுடன் ஆக்ரோஷமின்றி விளையாடுவதை அனைவராலும் காண முடிகிறது. இந்த சூழலில் டிம் பெய்னின் ஆதரவுக்கருத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது.