‘இது வெட்கக்கேடானது’ என வருந்திய கேப்டன்.. மன்னிப்பு கேட்ட பிரபல வீரர்..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Jul 15, 2019 12:09 PM

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பரபரப்பாக நடந்துமுடிந்த இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

I apologize to Kane says Ben Stokes on the deflected four

இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் முதலில் களமிறங்கிய நியூசிலாந்து 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 241 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து விளையாடிய இங்கிலாந்து அணிக்கு வெற்றி பெற இறுதி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பென் ஸ்டோக்ஸ் இரண்டாவது ரன் ஓடும்போது மார்க்வுட் ரன் அவுட் ஆனார். இதனால் போட்டி ட்ராவில் முடிந்தது.

இதையடுத்து சூப்பர் ஓவர் வீசப்பட்டது. அதில் நியூசிலாந்து அணி கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இரண்டாவது ரன் ஓடும்போது கப்டில் ரன் அவுட் ஆனார். இதனால் சூப்பர் ஓவரும் ட்ராவில் முடிந்தது. இதைத்தொடர்ந்து அதிக பவுண்டரி அடித்ததன் அடிப்படையில் இங்கிலாந்து அணி முதல்முறையாக உலகக் கோப்பையை வென்றுள்ளது. 

இந்தப் போட்டியின்போது கடைசி ஓவரில் இரண்டாவது ரன் எடுக்க ஓடிய பென் ஸ்டோக்ஸின் பேட்டில் தவறுதலாகப் பட்ட த்ரோ பவுண்டரிக்குச் சென்றது. இதுவே போட்டி ட்ராவில் முடிய முக்கியக் காரணமாகவும் அமைந்தது. போட்டி முடிந்து இதுகுறித்துப் பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டன் கனே வில்லியம்ஸன், “எங்கள் த்ரோ ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு பவுண்டரிக்குச் சென்றது அதிர்ச்சியளித்தது. இது வெட்கக்கேடானது. இதை ஏற்றுக்கொள்வது என்பது கடினமான காரியம். எனினும் இதுபோன்ற பெரிய போட்டிகளின்போது இது மீண்டும் நடக்காது என நம்புகிறேன். போட்டியில் இந்த நிலைக்கு வர எங்கள் வீரர்கள் முழு முயற்சியையும், உழைப்பையும் கொடுத்தார்கள்” எனக் கூறியுள்ளார்.

பின்னர் பேசிய இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ், “கடைசி ஓவரில் த்ரோ செய்யப்பட்ட பந்து என்னுடைய பேட்டில் பட்டு பவுண்டரிக்குச் சென்றது. இதை வேண்டுமென்றே செய்யவில்லை.  ஆனாலும் இதற்காக கனே வில்லியம்ஸனிடம் மன்னிப்பு கேட்கிறேன்” எனக் கூறியுள்ளார். முன்னர் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியின் ஒரு த்ரோ (தோனி ரன் அவுட்) அவர்கள் வெற்றிக்கு ஒரு முக்கியக் காரணமானது இங்கு குறிப்பிடத்தக்கது.

 

 

 

Tags : #ICCWORLDCUP2019 #INDVSNZ #NZVSENG #MSDHONI #KANEWILLIAMSON #BENSTOKES